ஐஎஸ் இஸ் கிரேட்... ‘அந்த’ நேரத்தில் சத்தமிட்ட பாட்டி.. போலீசுக்குப் போன் போட்ட பக்கத்து வீட்டுப்பெண்
நியூயார்க்: அமெரிக்காவில் 82 வயதுப் பெண் தனது வீட்டில் 'அந்தரங்கமாக' இருந்த சமயத்தில் ஐஎஸ்ஐஎஸ் இஸ் கிரேட் என்று சத்தம் போட்டதாக, பக்கத்து வீட்டுப் பெண் போலீஸுக்குத் தகவல் கொடுத்தார்.
இதைக் கேட்டு குழம்பிப் போன போலீஸார் இதுகுறித்து மீண்டும் அந்தப் பெண் சத்தம் போட்டால் தகவல் தெரிவிக்குமாறு புகார் கூறியவருக்கு அறிவுரை கூறினர்.

விஸ்கான்சின் மாகாணம், மில்வாக்கி கவுன்டியைச் சேர்ந்தவர் ஒரு பெண் உள்ளூர் போலீஸாரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அவர்களிடம், தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 82 வயதுப் பெண், அவரது வீட்டில் உறவில் ஈடுபடும்போது, 'ஐஎஸ் இஸ் குட் ஐஎஸ் இஸ் கிரேட்' என்று சத்தம் போடுவதாகவும், வந்து விசாரணை நடத்துமாறும் கூறினார்.
இதைக் கேட்டு போலீஸார் குழம்பினர். மறுபடியும் அவர் அதேபோல சத்தம் போட்டால் தங்களுக்குத் தகவல் தருமாறு கூறி அப்பெண்ணை அமைதிப்படுத்தியுள்ளனர். ஆனால் அப்பெண்ணிடமிருந்து மறுபடியும் போன் வரவில்லையாம்.
இதுகுறித்து அப்பகுதி போலீஸ் தலைவர் மைக்கேல் காஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், "ஒரு வேளை அந்த மூதாட்டி 'சே சம்திங் சே சம்திங்' என்று கூறியிருக்கலாம். அது பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு காதில் வேறு மாதிரி கேட்டிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்போது இது டிவிட்டரில் வைரல் ஆகியுள்ளது. ஜோக்குகளும் குவியத் தொடங்கியுள்ளன.












Click it and Unblock the Notifications