கணவருக்கு ஆபரேஷன்... மருத்துவச் செலவிற்காக ஒரு வயது மகளை விற்க முயன்ற பெண்
பீஜிங்: சீனாவில் கணவனின் உயிரை காப்பாற்றுவதற்காக, பெற்ற மகளை விற்க தாய் முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் பஸ்ஹூ நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளி ஜூவோ குய்சிங்கின் மனைவி நீ குவாங் (25). கடந்த வியாழக்கிழமை 3 மாடிக் கட்டிடத்தில் பணி புரிந்து கொண்டிருந்த ஜூவோ எதிர்பாரா விதமாக கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவரது முதுகு தண்டுவடத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார் ஜூவோ. அங்கு அவருக்கு முதுகில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபரேஷனுக்கு தேவையான பணம் நீகுவாங்கிடம் இல்லை.
கணவரின் மருத்துவச் செலவிற்காக தனது ஒரு வயது மகளை விற்க முடிவு செய்தார் நீகுவாங். அதன்படி, பஸ்ஹு நகர சாலையில் மண்டியிட்டபடி, ‘எனது கணவரின் ஆபரேஷனுக்கு பணம் தேவைப்படுகிறது. யாராவது என் ஒரு வயது மகளை எடுத்துக் கொண்டு பணம் தாருங்களேன்' எனக் கெஞ்சியுள்ளார்.
அந்த சாலை வழியே சென்ற பொதுமக்கள் இது தொடர்பாக ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். ஊடகங்களில் வெளியான இச்செய்தியைப் பார்த்த பொதுமக்களில் சிலர், தற்போது ஜூவோங்கின் சிகிச்சைக்காக நிதி அனுப்பி வருகின்றனர்
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications