கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய மனைவி.. மயக்க மருந்து கொடுத்து வெறிச்செயல்.. ஷாக் காரணம்
லியோ டீ ஜெனிரோ: கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவு கொடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டி கழிவறையில் மனைவி வீசியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஷாக் காரணம் வெளியாகி உள்ளது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோவிற்கு அருகே அதிபாயா என்ற பகுதியில் வசித்து வருபவர் 39 வயது ஆண். திருமணம் ஆனவர். இவருக்கு 35 வயதில் மனைவி உள்ளார்.

இந்நிலையில் தான் அந்த ஆண், அவரது உறவுக்கார 15 வயது சிறுமியிடம் தவறாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அவர் அந்த சிறுமியிடம் உடலுறவு வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் இந்த உடலுறவு குறித்து அவரது மனைவிக்கு தெரியவந்தது. மேலும் அவர் கோபத்தின் உச்சிக்கு சென்றார். இதையடுத்து தனது கணவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என் அவர் நினைத்தார். இதற்காக கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிவிட திட்டமிட்டார். இதற்காக அவர் தனியே திட்டம் ஒன்றையும் வகித்தார்.
அதன்படி கணவருக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு அவர் மயங்கிய பிறகு அந்தரங்க உறுப்பை வெட்ட திட்டமிட்டார். திட்டமிட்டபடியே அவர் தனது கணவருக்கு மயக்க மருந்து கலந்த உணவை கொடுத்தார். அதனை சாப்பிட்ட கணவர் மயங்கவே மனைவி அவரது அந்தரங்க உறுப்பை வெட்டினார். அதன்பிறகு கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டிய நிலையில் அதனை செல்போனில் போட்டோவாக எடுத்து வைத்து கொண்டார்.
பிறகு அந்த அந்தரங்க உறுப்பை அவரது மனைவி கழிவறையின் உள்ளே போட்டுவிட்டு தண்ணீரை ஊற்றினார். இந்நிலையில் தான் மயக்கம் தெளிந்த நிலையில் அவரது கணவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியடைந்தார். மனைவியால் தனக்கு நேர்ந்த கொடுமையை அருகே உள்ளவர்களிடம் கூறி கதறினார். இதையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதற்கிடையே அவரது மனைவி போலீசில் நிலையத்தில் சரணடைந்தார். போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ‛‛உறவுக்கார சிறுமியுடன் உறவு வைத்திருந்தார். இதனால் மயக்கமருந்து கொடுத்து அவரது அந்தரங்க உறுப்பை வெட்டினேன். மேலும் அந்த உறுப்பை வைத்திருந்தால் அவர் மருத்துவ சிகிச்சை மூலம் மீண்டும் அதனை சேர்த்து விட முடியும். இதனால் தான் கழிவறையின் உள்ளே போட்டுவிட்டேன்'' என தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் பிரேசிலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications