ஆற்றங்கரையில் காருக்குள் "குண்டக்க மண்டக்க".. வேகம் தாங்காமல் கார் ஆற்றில் கவிழ்ந்து பெண் பலி!
மாஸ்கோ: ரஷ்யாவில் ஆற்றங்கரையோரமாக காரை நிறுத்தி விட்டு, காருக்குள் வைத்து தனது காதலருடன் உறவில் ஈடுபட்டார் ஒரு பெண். அப்போது வேகம் தாங்காமல் கார் நகர்ந்து ஆற்றில் கவிழ்ந்து விழுந்தது. இதில் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
அந்த காதலர் கார் கண்ணாடியை உடைத்து எப்படியோ உயிர் தப்பினார். ஆனால் அந்தப் பெண்தான் பாவம் ஆற்று நீரில் மூழ்கி உயிரை விட்டார்.

ரஷ்யாவின் குபன் ஆற்றில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண் தனது காதலருடன் காரில் பிக்னிக் கிளம்பி வந்துள்ளார். இருவரும் வாஸ் 2115 என்ற மாடல் காரில் வந்தனர். குபன் ஆற்றுப் பகுதிக்கு வந்த இருவரும் காரை ஆற்றங்கரையோரமாக நிறுத்தினர். அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் இருவரும் உறவில் இறங்கினர். அப்போது ஹேன்ட் பிரேக்கை சரியாக போடாமல் விட்டுள்ளார் காதலர்.
இந்த நிலையில் உறவு வேகம் பிடிக்க பிடிக்க கார் வேகமாக அசைந்து மெதுவாக நகர்ந்துள்ளது. அது கூட தெரியாமல் இருவரும் உறவில் மும்முரமாக இருந்தனர். நகர்ந்த கார் அப்படியே போய் ஆற்றில் விழுந்து விட்டது. இதையடுத்து கார்க் கண்ணாடியை உடைத்துக் கொண்டு காதலர் வெளியே வந்து விட்டார். ஆனால் அந்தப் பெண் பாவம் ஆற்று நீரில் மூழ்கி மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
இறந்த பெண்ணுக்கு வயது 35 ஆகும்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரி நதாலியா ஸ்மியாட்ஸ்கோய் கூறுகையில், அந்த சமயத்தில் அந்த ஆண் குடி போதையிலும் இருந்துள்ளார். எனவே அவர் நினைத்திருந்தாலும் கூட அப்பெண்ணைக் காப்பாற்றியிருக்க முடியாது. மேலும் அவர்கள் காரை நிறுத்தி விட்டு நன்றாக குடித்துள்ளனர். நிறைய பாட்டில்கள் அங்கு இருந்தன என்றார்.


Click it and Unblock the Notifications
