செல்பி மோகம்... ஏரியில் இருந்த அன்னப்பறவையை வெளியில் தூக்கி கொலை செய்த பெண்!
சோபியா: பல்கேரியாவில் செல்பி மோகத்தில் இளம்பெண் ஒருவர் ஏரியில் இருந்த அன்னப்பறவையை அதன் இறக்கையைப் பிடித்துத் தூக்கி, அது உயிரிழக்க காரணமாக அமைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பல்கேரியாவில் உள்ளது ஓரிட் ஏரி. அன்னப்பறவைகள் நிறைந்த இந்த ஏரியை பார்க்க தினமும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
அந்தவகையில் அடையாளம் தெரியாத இளம்பெண் ஒருவர், அந்த ஏரிக்கரையில் அன்னப்பறவையுடன் செல்பி எடுக்க விரும்பியுள்ளார். இதற்காக ஏரியில் இருந்த அன்னப்பறவை ஒன்றை, அதன் இறக்கைகளைப் பிடித்து வெளியே தூக்கியுள்ளார்.
Again!? #Swan #Dies After Tourist Grabs Him From Lake For #Selfie (Leave #wildlife alone!) https://t.co/7oY5sfIc7B
— Barbi Twins (@Barbi_Twins) 9 March 2016
இதில், அந்த அன்னப்பறவை பலத்த காயமடைந்துள்ளது. ஆனால், அதனை கண்டுகொள்ளாமல் செல்பி எடுத்துவிட்டு, அந்த அன்னப்பறவையை அப்படியே கரையில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார் அப்பெண். சிறிது நேரத்தில் அந்த அன்னப்பறவை பரிதாபமாக உயிரிழந்தது.
அப்பெண் அன்னப்பறவையை அதன் இறக்கைகளைப் பிடித்து தூக்கும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. பறவைகள் நல ஆர்வலர்கள் அப்பெண்ணின் செயலுக்கு கட்டணம் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்து வரும் செல்பி மோகத்தால் ஆங்காங்கே உயிரிழப்புகளும் ஏற்படுவது தொடர்கதையாகிறது. அதிலும் குறிப்பாக ஆபத்தான் இடங்களில், விலங்குகளுடன் படமெடுக்க முயற்சிக்கும் போது இத்தகைய விபத்துகள் நடக்கின்றன.
கடந்தாண்டு விஷமுள்ள பாம்புடன் செல்பி எடுக்க முயன்ற பெண்ணை, அப்பாம்பு கடித்ததில் பரிதாபமாக அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications