ஹாயாக விமான ஏசி வெண்ட்-டில் உள்ளாடையைக் காய வைக்கும் பெண்... வைரலாகும் வீடியோ!
விமானத்தில் பெண் பயணி ஒருவர் ஏசி வெண்ட்டிற்கு கீழே தனது உள்ளாடையைக் காயவைக்கும் வீடியோ வைரலாகியுள்ளது.
Recommended Video

அங்காரா: துருக்கி விமானத்தில் ஏசி வெண்ட்டிற்கு கீழே பெண் பயணி ஒருவர் தனது உள்ளாடையைக் காய வைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
நடுவானில் நடக்கும் சச்சரவுகள், காமெடிகள் என இணையத்தில் எப்போதும் விமானம் குறித்த செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. அந்தவகையில் தற்போது புதிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அது, விமானத்தில் மற்ற பயணிகள் முன்னிலையில் பெண் ஒருவர் உள்ளாடையை ஏசி வெண்ட்டிற்கு கீழே காயவைக்கும் வீடியோ ஆகும்.

துருக்கியின் அண்டால்யாவிலிருந்து மாஸ்கோ நோக்கிச் சென்று கொண்டிருந்த உரால் ஏர்லைன்ஸ் விமானத்தில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. காதலர் தினத்தன்று எடுக்கப்பட்ட இந்த வீடியோவை ரஷ்யாவின், 'தி பர்ஸ்ட் துலா’ என்ற வெப்சைட் யுடியூப்பில் வெளியிட்டுள்ளது.
இதில், பெண் பயணி ஒருவர் தன் முதுகுப்புறம் தெரியுமாறு அமர்ந்தவாறு, தனக்கு மேலே உள்ள ஏசி வெண்ட்டிற்கு நேராக தனது உள்ளாடையைக் காய வைக்கிறார். அதனை பின்புறம் அமர்ந்திருந்த மற்றொரு பயணி தன் செல்போனில் பதிவு செய்துள்ளார்.
அப்பெண்ணின் செயலிற்கு அங்கிருந்த மற்ற பயணிகள் யாரும் ஆட்சேபம் எதுவும் தெரிவிக்கவில்லை. அனைவரும் அமைதியாகவே இருக்கின்றனர்.
இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது.
கடந்த 16ம் தேதி இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோவை இதுவரை 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications