30,000 அடி உயரத்தில் விமானத்தில் பிறந்த "தேவதை"... அழகிய வீடியோ!

Subscribe to Oneindia Tamil

பெய்ஜிங்: நடுவானில் பறந்து கொண்டிருந்த தைவான் விமானத்தில் பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது. இதனை பயணி ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார்.

தைவானின் டொயுன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு பயணிகளோடு விமானம் ஒன்று புறப்பட்டது. அதில் மஜ்தி என்ற கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணம் செய்தார். அவருக்கு இன்னும் இரண்டு மாதங்கள் கழித்தே பிரசவ தேதி கொடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமானம் அந்தரத்தில் பறந்து கொண்டிருந்த போது திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது.

பிரசவ வலி...

பிரசவ வலி...

உடனடியாக விமானம் அலாச்காவில் தரையிறக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாக கர்ப்பிணிப் பெண்ணுக்கு பனிக்குடமும் உடைந்தது. இதனால் விமானத்திலேயே பிரசவம் நடைபெற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

தேவதை...

தேவதை...

சற்றும் தாமதிக்காத விமானப்பணிப்பெண்கள் சேர்ந்து விமான இருக்கையிலேயே அப்பெண்ணுக்கு பிரசவம் நடைபெற உதவி செய்தனர். பின்னர் அப்பெண்ணிற்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது.

அவசர தரையிறக்கம்...

அவசர தரையிறக்கம்...

பின்னர் அந்த விமானம் அலாஸ்காவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பின்னர் அப்பெண்ணும், அவரது குழந்தையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். 3 மணி நேரம் தாமதமாக அந்த விமானம் லாஸ் ஏஞ்சல்ஸ் புறப்பட்டுச் சென்றது.

வீடியோ...

விமானத்தில் பிரசவம் நடந்த அந்த அரிய காட்சிகளை அந்த விமானத்தில் பயணம் செய்த பலர் வீடியோ மற்றும் புகைப்படங்களாக பதிவு செய்தனர். அதில் ஒரு வீடியோ யூடியூபில் வெளியாகியுள்ளது.

3 லட்சம் பேர்...

3 லட்சம் பேர்...

கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான அந்த வீடியோவை இதுவரை 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

உதவி...

உதவி...

மும்பை ரயிலில் பிரசவித்த பெண்ணுக்கு இந்தப் பெண் பரவாயில்லை. அங்கு யாருமே உதவிக்கு வரவில்லை. ஆனால் இந்தப் பெண்ணுக்கு பலர் கூடி பிரசவம் பார்த்து தாயையும், சேயையும் காப்பாற்றியுள்ளனர்.

இலவசப் பயணம்...

இலவசப் பயணம்...

அப்புறம் இன்னொரு செய்தி பாஸ்... தங்களது நிறுவன விமானத்தில் குழந்தை பிறந்ததால், தாய் மஜ்திக்கும், அவரது குழந்தை நான்சிக்கு 18 வயது ஆகும் வரையில், இலவசமாக பயணம் செய்யலாம் என்று அந்த விமான நிறுவனம் அறிவித்துள்ளதாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+