OMG...முழுக்க குண்டு அடைக்கப்பட்ட பிஸ்டலை 'அந்த' இடத்தில் மறைத்து வைத்த அமெரிக்க பெண்!
வாஷிங்டன்: அமெரிக்காவில் போதை மருந்து கடத்திய 31 வயது பெண்மணியை கைது செய்த போலீசார் அவரின் பெண் உறுப்புக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைத் துப்பாக்கியையும் மீட்டுள்ளனர்.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம், வாகோ பகுதியில் போதை மருந்து புழக்கத்திற்கு தடை செய்யப்பட்ட ஒரு பகுதியில் (பள்ளியொன்றில் இருந்து 1000 அடி தூரத்திற்கு உள்ளே) லேண்ட்ரோவர் வகை சொகுசு கார் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தது.

இதையடுத்து அந்த காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். காரில் இருந்தது ஆஷ்லே செசிலா கஸ்டனேடா என்ற 31 வயது பெண்மணி என்பதும், டிரைவர் பெயர் கேப்ரியல் கர்சியா என்பதும் தெரியவந்தது. அவர்களிடம் சோதனை நடத்தியபோது, போதை சுமார் 30 கிராம் அளவுள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரையும் போலீசார் கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அப்போது, ஆஷ்லே தனது கால்களை ஒடுக்கி வைத்தபடி நடந்து வருவதை பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் கவனித்து விசாரித்தார். அப்போது, ஆஷ்லே கூறிய விஷயம் அதிகாரியை தூக்கிவாரிப் போட்டது.

தனது பெண் உறுப்புக்குள், முழுதும் லோடு செய்யப்பட்ட கைத்துப்பாக்கியை வைத்துள்ளேன் என்று ஆஷ்லே, அசால்ட்டாக தெரிவித்தார். இதைக்கேட்ட அதிகாரிகள் முதலில் அதை நம்பவில்லை. ஆனால் பெண் அதிகாரி ஒருவர் தனியாக ஆஷ்லேயை அழைத்துச் சென்று பெண் உறுப்பை சோதித்து பார்த்தார். ஆஷ்லே சொன்னது போல உள்ளே கைத்துப்பாக்கி கிடந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்மித் வெசன் வகையை சேர்ந்த அந்த துப்பாக்கியை அதிகாரி பறிமுதல் செய்தார். சட்டவிரோதமாக ஆயுதம் கடத்திய வழக்கும் ஆஷ்லே மீது பதியப்பட்டது. இந்த சம்பவம் டெக்சாசில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
அந்தர் பல்டி அடிக்கும் டிரம்ப்.. 25% வரி 15 சதவீதமாக குறைப்பு.. வழிக்கு வந்த அமெரிக்கா! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு!












Click it and Unblock the Notifications