தண்ணி அடிக்க பணம் தர மறுத்த பாட்டி.. பிராவைக் கிழித்து எறிந்து தாக்கிய பேத்தி!

Subscribe to Oneindia Tamil

புளோரிடா: அமெரிக்காவில் தானும், தனது காதலரும் மது அருந்த பணம் கொடுக்க பாட்டி மறுத்ததால் கோபமடைந்த அவருடைய பேத்தி, பாட்டியைத் தாக்கினார். பாட்டியின் பிராவையும் பறித்து கிழித்து எறிந்து கோபத்துடன் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார். காயமடைந்த பாட்டியை போலீஸார் வந்து மீட்டனர். பேத்தி மற்றும் அவரது காதலர் கைது செய்யப்பட்டனர்.

புளோரிடாவைச் சேர்ந்தவர் பிரிஜிட் மட்ஸ்கே. 25 வயதாகிறது. இவரது காதலர் அலெக்ஸ் கால்ட்வெல். திங்கள்கிழமையன்று இவர்கள் இருவரையும் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீதான குற்றச்சாட்டு - பிரிஜிட்டின் பாட்டியைத் தாக்கி அவரது பிராவைக் கிழித்து எறிந்தது.

சம்பவத்தன்று பிரிஜிட் தனது பாட்டியிடம் போய் 80 டாலர் பணம் தருமாறும், தானும் தனது காதலரும் ஹோட்டலுக்குப் போய் மருந்து போவதாகவும் கூறியுள்ளார். ஆனால் பாட்டி பணம் தர மறுத்து விட்டார். கோபமடைந்த பிரிஜிட் பாட்டியைத் தாக்கினார். அவரது உடையைப் பிடித்து இழுத்தார். உள்ளே போட்டிருந்த பிராவைப் பறித்து கோபத்துடன் கிழித்து வீசினார்.

பாட்டி போலீஸுக்குப் போன் செய்யமுயன்றபோது போனைப் பிடுங்கி பாட்டி தலையில் ஓங்கி அடித்தார். இதில் பாட்டி காயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீஸார் காயத்துடன் கிடந்த பாட்டியை மீ்ட்டனர். தப்பி ஓடிய பேத்தி மற்றும் காதலரை ஒரு பெட்ரோல் பங்கில் வைத்துப் பிடித்தனர். காதலர் அங்கிருந்த கழிப்பறைக்குள் போய் பம்மியிருந்தார். அவரைப் பிடித்துக் கைது செய்தனர் போலீஸார்.

அடிபட்ட பாட்டிக்கு வயது 84 என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+