கடையில் குழந்தையை விட்டுவிட்டு அதை சுமந்து செல்லும் வண்டியை சாமர்த்தியமாக திருடிய பெண்கள்.. வீடியோ
நியூ ஜெர்சி: குழந்தையை கடையிலேயே மறந்துவிட்டுவிட்டு குழந்தையை அழைத்து செல்லும் ஸ்டிரோலரை 3 பெண்கள் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகியுள்ளன.
அமெரிக்காவில் நியூ ஜெர்சி மாகாணத்தில் பாம்பி பேபி ஷாப் என்ற குழந்தைகளுக்கான பிரத்யேக கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு 3 பெண்கள் வந்தனர். பார்ப்பதற்கு டீசன்ட்டாகவும் டெனிம் ரக ஸ்கர்ட்டை அணிந்து கொண்டிருந்தனர்.
இவர்கள் உடன் சின்னஞ்சிறிய குழந்தைகளையும் அழைத்து வந்தனர். அப்போது அவர்கள் குழந்தையை தூக்காமல் தள்ளுவண்டியில் தள்ளி செல்லும் ஸ்டிரோலர் எனும் வண்டியை பார்த்தனர். அதன் விலையை கேட்டவுடன் அதை வாங்க சற்று தயங்கினர்.

2 பெண்கள்
பின்னர் 3 பெண்களில் 2 பெண்கள் குழந்தையை அந்த வண்டியில் அமர வைத்து தள்ளிக் கொண்டு அங்கும் இங்கும் சென்றனர். அப்போது கடைக்காரர் கவனிக்காத நேரமாக பார்த்து அப்படியே அந்த வண்டியுடன் செல்போனில் பேசி கொண்டே வெளியே வந்துவிட்டனர்.

கடையில் விட்டு சென்ற பெண்கள்
இவர்களுடன் வந்த இன்னொரு பெண்ணோ குழந்தையை கடையிலேயே விட்டுவிட்டு வண்டியை மட்டும் தள்ளி கொண்டு வெளியே சென்றுவிட்டார். பின்னர் பெரியவர்கள் யாரும் இல்லாமல் குழந்தை மட்டும் தனியாக இருப்பதை கடையின் உரிமையாளர் கண்டு அதிர்ச்சி அடைந்து பெற்றோரை தேடினார்.

இன்னொரு பெண்
பின்னர் சிசிடிவி காட்சிகளை கண்டார். அப்போதுதான் இந்த பெண்கள் ஸ்டிரோலரை திருடிக் கொண்டு செல்லும் காட்சிகள் தெரியவந்தது. இதையடுத்து உரிமையாளர் போலீஸாருக்கு புகார் அளித்தார். அதற்குள்ளாக அந்த பெண், குழந்தையை கடையிலேயே விட்டுவிட்டது நினைவுக்கு வந்து கடைக்கு வந்தார். அப்போது அவரையும் இன்னொரு பெண்ணையும் போலீஸார் கைது செய்தனர்.
பேஸ்புக் பக்கம்
இதனிடையே இந்த சிசிடிவி காட்சிகளை கடையின் உரிமையாளர் தனது கடையின் பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அது வைரலாகியுள்ளது. அவர் கூறுகையில், நண்பர்களே இந்த திருடர்களை அடையாளம் காண உதவி செய்யுங்கள். குழந்தையை விட்டுச் செல்லும் அளவுக்கு திருட்டு இவர்களது கண்களை மறைத்துள்ளது.
ஷேர் செய்த உரிமையாளர்
திருடுங்கள் அது உங்களுடைய தனிப்பட்ட பிரச்சினை. ஆனால் குழந்தையுடன் வரும் போது அதை செய்யாதீர். இந்த சம்பவத்தில் திருடும் பெண்கள் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே தெரியாத அளவுக்கு குழந்தையை விட்டு சென்றுள்ளனர். இது போல் செய்யக் கூடாது என்பதற்காகவே இந்த வீடியோவை நான் ஷேர் செய்துள்ளேன் என்று அந்த பதிவில் கூறியுள்ளார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications