ஒரு நறுக் செயல்.. அதற்கு சுருக் பதில் கொடுத்த பெண்... கலகல வீடியோ!
குப்பை போடக்கூடாது என்பதை வலியுறுத்தும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video

பெய்ஜிங்: சாலையில் குப்பை போடக்கூடாது என்பதை ஒரு பெண்மணி நூதன முறையில் வெளிப்படுத்தி உள்ளார்.
நம்ம நாட்டை தவிர பெரும்பாலான நாடுகள் சுற்றுபுறத்தூய்மையை கடைப்பிடிக்க கூடியதாகத்தான் உள்ளது. சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் அபராதத்திற்கு பயந்துகொண்டே எங்கே குப்பை தொட்டி என்று தேடி சென்று குப்பையை போட்டுவிட்டு வருவார்கள்.
பெரும்பாலும் மேலை நாடுகளில் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைக்க பொதுமக்களின் ஒத்துழைப்பும் அதிகமாகவே இருக்கிறது. இப்படித்தான் ஒரு சம்பவம் சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கில் நடந்துள்ளது.

பைக் நின்றது
ரோடு ஓரம் ஒரு கார் நின்று கொண்டிருக்கிறது. அந்த காரிலிருந்த பெண் ஒருவர் கையிலிருந்த குப்பையை காரிலிருந்து வெளியே சாலையில் தூக்கி போட்டார். அந்த நேரம் பார்த்து அவ்வழியே ஒரு பைக் வந்துகொண்டிருந்தது.

சாலையில் குப்பை
காருக்குள் இருந்து வெளியே குப்பை வந்து விழுந்ததை பார்த்ததும் பைக் அங்கேயே அப்படியே நின்றுவிட்டது. பைக்கை ஓட்டி வந்தது ஒரு பெண். அங்கேயே பைக்கை நிறுத்திவிட்டு, இறங்கி வந்து கீழே கிடந்த குப்பையை குனிந்து எடுத்தார். அதை அந்த காருக்குள்ளேயே திரும்பவும் போட்டுவிட்டு மீண்டும் பைக்கை எடுத்து கொண்டு கிளம்பிவிட்டார்.

வாதம் செய்யவில்லை
யார் குப்பை போட்டால் நமக்கென்ன என்று அந்த பெண் செல்லவில்லை... அதேபோல குப்பை ஏன் போட்டீர்கள் என்று காரில் இருந்தவரிடம் சண்டைக்கும் வாதத்துக்கும் போகவில்லை... குப்பையை எடுத்துப்போட்டு விட்டு எந்த அறிவுரையும், விளக்கமும் சொல்லவில்லை. போய்க் கொண்டே இருந்தார். ஆனால் காரின் டிரைவர் சீட்டில் இருந்த பெண்தான் கோபமடைந்து கதவை வெளியே திறந்து வந்து கத்தினார். ஆனால் பைக் பெண் தனது கடமையை முடித்து விட்டு பறந்து போய் விட்டார்.
|
நறுக், சுருக் பதில்
குப்பை போடக்கூடாது என்பதை தன் செய்கையால் நறுக்கென்றும், சுருக்கென்றும் அந்த பெண் பேசாமலேயே பேசிவிட்டு நகர்ந்து சென்ற 39 செகண்ட் வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications