For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொக்கைன் வைக்கும் இடமா அது.. என்னம்மா இப்படி பண்ணிட்டீங்களேம்மா?

Google Oneindia Tamil News

பகோடா, கொலம்பியா: பர்ஸ் வைத்தார்கள்.. இப்போது அதையும் தாண்டி "உள்ளேயே" போய் கொக்கைன் போதைப் பொருளையும் அதில் வைக்க ஆரம்பித்து விட்டார்கள்.. ஆனால் இது கொலம்பியாவில்.

கொலம்பியா போதைப் பொருள் கடத்தல் அதிகாரிகள், பகோடா விமான நிலையத்தில் ஒரு பெண்ணை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் போதைப் பொருள் எதுவும் சிக்கவில்லை. இருந்தாலும் அதிகாரிகளுக்குச் சந்தேகம் போகவில்லை.

Woman with cocaine-filled breast implants arrest

இதையடுத்து 22 வயதான பாலோ டெயனிரா சபில்லான் என்ற அந்தப் பெண்ணை தனியாக அழைத்துச் சென்று அதி நவீன ஸ்கேன் இயந்திரரம் மூலம் ஸ்கேன் செய்தபோது அவரது மார்பகங்களுக்குள் ஏதோ இருப்பது தெரிய வந்தது.

அவர் சமீபத்தில்தான் தனது மார்பகத்தில் அறுவைச் சிகிச்சை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை பகோடாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்து அவரது மார்பகத்தை டாக்டர்கள் சோதித்தபோது அது செயற்கை மார்பகம் என்று தெரிய வந்தது. இதையடுத்து அந்த செயற்கை மார்பகத்தை டாக்டர்கள் அகற்றினர். அதற்குள் கொக்கைன் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. திரவ நிலையிலான அந்த கொக்கைன் 3.3 பவுண்டு எடை கொண்டதாக இருந்தது.

இந்தப் பெண் ஹோண்டுராஸைச் சேர்ந்தவர். ஸ்பெயினுக்குச் செல்வதற்காக விமானம் ஏற வந்திருந்தார். இவர் கொலம்பியாவில் உள்ள பெரைரா என்ற நகரில்தான் மார்பக அறுவைச் சிகிச்சை செய்திருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது அப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

English summary
Authorities in Colombia said a woman was arrested at an airport in the capital when her breast implants were found to contain 3.3 pounds of liquid cocaine.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X