"டே கருப்பா"... கொரில்லாவைப் பார்க்க அலை அலையாய் குவியும் இளம் பெண்கள்
டோக்கியோ: ஜப்பானில் உள்ள ஒரு கொரில்லா குரங்குக்கு ஏகப்பட்ட இளம் பெண்கள் ரசிகையாக உள்ளனர். இந்தக் குரங்கைப் பார்க்க கூட்டம் கூட்டமாக இளம் பெண்கள் அலை மோதுவதால் இளைஞர்களிடையே இந்த குரங்குக்கு ஏகப்பட்ட பொறாமை வலுத்து வருகிறதாம்.
அந்தக் குரங்கின் பெயர் ஷபானி. 180 கிலோ எடை இருக்கும். ஜப்பானின் நகோயா மாகாணத்தில் உள்ள ஹிகஷியமா விலங்கியல் காப்பகத்தில் இது உள்ளது.
பார்ப்பதற்கு கட்டழகுடன் காணப்படுவதால் இதற்கு இளம் பெண்களிடையே செம கிரேஸ் கூடியுள்ளதாம்.

கனவு நாயகன்...
முறுக்கேறிய கைகள், தொப்பை இல்லாத வயிறு என பெண்கள் விரும்பும் அத்தனை அம்சங்களும் இந்த கொரில்லாவிடம் இருப்பதாக பெண்கள் பெருமையுடன் கூறுகிறார்கள்.

புகழ்...
18 வயதான இந்த கொரில்லா, இந்த விலங்கியல் பூங்காவின் நாயகனாக வலம் வருகிறது. கிட்டத்தட்ட ஒரு மாடலுக்குக் கிடைக்கும் பெயரும், புகழும் இந்த கொரில்லாவுக்குக் கிடைத்துள்ளது.

ஸ்டைல்... ஸ்டைல்
இங்குள்ள மற்ற கொரில்லாக்களை விட இந்த கொரில்லாவுக்குத்தான் அதிக ரசிகர்கள். காரணம், இது ஸ்டைலாக இருப்பதாக பெண்கள் கூறுவதே.

பாச உணர்வு...
இந்த கொரில்லா தனது குட்டிகளை மிகவும் பாதுகாப்பாக, அக்கறையாக பார்த்துக் கொள்ளுமாம். அந்த அருமையான பாச உணர்வும் கூட பெண்களை ஈர்க்க இன்னொரு காரணமாம்.

கூட்டம்...
ஷபானியின் புகழ் தற்போது சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி வருகிறது. இதனால் பூங்காவுக்கு வரும் கூட்டமும் அதிகரித்து வருகிறதாம்.


Click it and Unblock the Notifications
