For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அது ஏன் பெண்கள் வலது பக்கமாக செல்ஃபி எடுக்கிறார்கள்? இப்படியும் ஒரு சர்வே

By Veera Kumar
Google Oneindia Tamil News

லண்டன்: பெண்கள் பொதுவாக வலது பக்கம் போனை வைத்தே செல்ஃபி போட்டோக்களை எடுக்க விரும்புவதாக ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

செல்போனில் தங்களை தாங்களே போட்டோ எடுத்துக்கொள்ளும் செல்ஃபி மோகம், தற்போது நகரம், கிராமம் எங்கும் வியாபித்துள்ளது. இந்த செல்ஃபியில் பெரிய ஒற்றுமை ஒன்றை பலரும் பார்த்திருக்கலாம். பெரும்பாலான பெண்கள் வலது பக்கம்தான் போனை பிடித்து செல்ஃபி எடுப்பார்கள்.

சர்வே

சர்வே

இதுகுறித்து லண்டனை சேர்ந்த டேட்டிங் வெப்சைட் ஒன்று சர்வே எடுத்துள்ளது. அந்த சர்வேயில், இந்த உண்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம்பேர் வலது'சாரிகள்'

அதிகம்பேர் வலது'சாரிகள்'

ஆய்வில் பங்கேற்ற பெண்களில் 23 சதவீதம்பேர், வலது பக்கம் போனை வைத்து செல்ஃபி எடுப்பதையே விரும்புவதாக கூறியுள்ளனர். 16 சதவீதம்பேர் இடதுபக்கமும் வைத்து போட்டோ எடுப்போம் என்று கூறியுள்ளனர்.

அப்படியே எடுப்போம்யா..

அப்படியே எடுப்போம்யா..

43 சதவீதம்பேர் இதுவரை அதுபோல கவனம் வைத்து செல்ஃபி எடுத்ததில்லை, இயல்பாகவே எடுத்துள்ளோம் என்று கூறியுள்ளனர்.

மச்சம் தெரிந்துவிட்டால்..

மச்சம் தெரிந்துவிட்டால்..

இந்த ஆய்வில் ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டுள்ளனர். பெரும்பாலானோர், மச்சம், வடு போன்றவற்றின் காரணமாக, வலது பக்கம் இருந்து எடுக்கப்படும் செல்ஃபிகள் அழகாக தெரிவதாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதையும் ஒரு ஆய்வு என்று எடுத்துள்ளவர்களை கண்டிப்பாக வியக்காமல் இருக்க முடியவில்லை.

English summary
If your girlfriend insists on clicking her selfie from the right-hand side, then she is not alone. Women ensure that the camera always captures their best side -- and almost half of women say that they will always turn a particular way when confronted with a camera.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X