கள்ளத்தொடர்பு: சிரியாவில் 2 நாட்களில் 2 பெண்களை கல்லால் அடித்துக் கொன்ற போராளிகள்
டமாஸ்கஸ்: சிரியாவில் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாகக் கூறி பெண் ஒருவரை போராளிகள் கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர்.
சிரியாவில் போராளிகள் பிடியில் உள்ள பகுதியில் இஸ்லாமிய சட்டம் அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 18ம் தேதி கள்ளத்தொடர்பு வைத்திருந்த பத்தா அகமது என்ற பெண்ணை கல்லால் அடித்து கொலை செய்ய போராளிகள் முடிவு செய்தனர். இதையடுத்து பொது இடத்தில் ஒரு குழியை தோண்டி அவரை இடுப்பளவு புதைத்தனர். பின்னர் ஒரு லாரி நிறைய கற்கள் கொண்டு வந்து போட்டு பத்தாவை அடிக்குமாறு மக்களிடம் கூறினர். ஆனால் அவரை அடிக்க மக்கள் முன்வரவில்லை. இதையடுத்து போராளிகளே பத்தா அகமதை கல்லால் அடித்துக் கொன்றனர்.
அவர்கள் கல்லால் அடித்தபோது கூட கருப்பு நிற புர்கா அணிந்திருந்த பத்தா சிறு சத்தம் கூட போடவில்லையாம். முன்னதாக கடந்த மாதம் 17ம் தேதி இதே கள்ளத்தொடர்பு குற்றத்திற்காக ஷம்சே அப்துல்லா(26) என்ற பெண்ணை போராளிகள் கல்லால் அடித்து கொலை செய்தனர்.
முன்னதாக ரமலான் மாதத்தில் நோன்பு வைக்காத 14 வயது சிறுவனை போராளிகள் சிலுவை போன்ற ஒன்றில் கட்டிவைத்து கொளுத்தும் வெயிலில் வாடவிட்டனர். போராளிகள் மக்களை தண்டிக்கும் முறை அவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications