இதுதான் சொர்க்கமா? பூமியில் இப்படி ஒரு இடம் இருக்கா? இணையத்தை உலுக்கிய விசித்திர வீடியோ! பாருங்களேன்
பெர்ன்: பூமியில் இப்படி ஒரு இடம் இருக்கிறதா என்று வியக்க வைக்கும் அளவிற்கு சொர்க்கம் போல காட்சி அளிக்கும் இடம் ஒன்றின் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
பூமி நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்து வருவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் உலகம் முழுக்க தெரிவித்து வருகின்றன. காலநிலை மாற்றம் காரணமாக வானிலை பாதிக்கப்படுவதாகவும், நீர் நிலைகள் மோசமாக பாதிக்கப்பட்டு வருவதாகவும் காலநிலை மாற்ற ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலையும் உயர்ந்து வருகிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம்.

வெப்பநிலை
உலகின் வெப்பநிலை அடுத்த 20 ஆண்டுகளில் 1.5 டிகிரி செல்ஸியஸ் உயர போகிறது.. இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம் என்று ஐனாவும் எச்சரிக்கை விடுத்து உள்ளது. முக்கியமாக காலநிலை மாற்றம் காரணமாக உலகம் முழுக்கவே நீர் நிலைகள் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில்தான் உலகில் இருக்கும் அழகான நீர் நிலை ஒன்றின் வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது. உலகில் மிகவும் குளிரான நாடுகளில் ஒன்று ஸ்விட்சர்லாந்து.

ஸ்விட்சர்லாந்து
ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள நீர் நிலை ஒன்றின் வீடியோதான் வேல்யுவாகி உள்ளது. பிரின்ஸ் என்ற ஏரியில் இந்த வீடியோ எடுக்கப்பட்டு உள்ளது. இதில் கொம்பு வைத்த மான் வகைகள் தண்ணீர் குடிக்க வருகின்றன. நிறைய மான்கள் வந்து தண்ணீர் குடிப்பது போல வீடியோவில் உள்ளது. இது பார்க்கவே எதோ சொர்க்கம் போல இருக்கிறது. படங்களில் சொர்க்கத்தை காட்டும் போது மான்கள் அழகான நீரில் தண்ணீர் கொடுப்பது போல காட்சிகள் இருக்கும். அது போலத்தான் இந்த வீடியோவும் இருக்கிறது.

பூமியில் உள்ளதா?
அதிலும் அந்த தண்ணீர் கொஞ்சம் கூட அழுக்கின்றி காணப்படுகிறது. பார்க்க தெளிவாக, கண்ணாடி போல தண்ணீர் உள்ளது. தண்ணீர் உள்ளே இருப்பதை மேலே இருந்து பார்க்கும் அளவிற்கு அவ்வளவு தெளிவாக தண்ணீர் உள்ளது. பூமியில்தான் இப்படி இரு இடம் இருக்கிறதா என்று சந்தேகம் கொள்ளும் அளவிற்கு அவ்வளவு விசித்திரமாக அந்த இடம் உள்ளது. இதை நெட்டிசன்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

நெட்டிசன்கள்
இந்த இடம் சொர்க்கம் மாதிரியே இருக்கிறது. முதலில் இதை பார்த்து கிராபிக்ஸ் என்று நினைத்துவிட்டோம். ஆனால் உற்று பார்த்தால்தான் தெரிகிறது. உண்மையில் இது ஒரிஜினல் இடம்தான். மனிதர்கள் இது போன்ற இடங்களுக்கு சென்று அதை குப்பையாக்க கூடாது. இது போன்ற இடங்களை விலங்குகளுக்கு கொடுத்துவிட்டு மனிதர்கள் சும்மா இருக்க வேண்டும், என்று நெட்டிசன்கள் பலர் குறிப்பிட்டு உள்ளனர். இந்த வீடியோ 5,78,000 வியூஸ்களை பெற்றுள்ளது. Buitengebieden என்ற நபர் ட்விட்டரில் இதை பகிர்ந்து உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications