உலகளவில் கொரோனாவால் 25 லட்சம் பேர் பாதிப்பு.. உலகிலேயே அதிக மரணத்தை சந்தித்த டாப் 10 நாடுகள்
ஜெனிவா: உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,556,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177,437 ஆக உயர்ந்து உள்ளது. உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2800 பேர் உயிரிழந்தனர்.
Recommended Video
கொரோனா வைரஸ் தொற்று சீனாவை தாண்டி பிற நாடுகளுக்கு கடந்த ஜனவரி மாதம் பரவ தொடங்கியது. ஐரோப்பாவின் பெரும்பாலான நாடுகளும், அமெரிக்காவும், இங்கிலாந்தும் மிக மோசமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 2,556,236 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோல் உலகில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 177,437 ஆக உயர்ந்து உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 690,039 இதுவரை குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 22ம் தேதி காலை நிலவரப்படி 57,239 பேர் உலகம் முழுவதும் கொரோனாவால் உடல் நிலை மோசமடைந்து தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார்கள். 1,631,521 பேர் ஓரளவு நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இத்தாலி 2வது இடம்
உலகிலேயே நேற்று அதிகபட்சமாக அமெரிக்காவில் கொரோனாவால் ஒரே நாளில் 2,800 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அமெரிக்காவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45,314 ஆக உயர்ந்துள்ளது. உலகிலேயே கொரோனாவால் அதிக மரணத்தை சந்தித்த உலகின் 2வது நாடாக உள்ள இத்தாலியில் நேற்று மட்டும் 534 பேர் உயிரிழந்தனர். இதனால் அங்கு கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 24,648 ஆக உயர்ந்துள்ளது.

பிரான்ஸ் 4வது இடம்
3வது இடத்தில் ஸ்பெயின் உள்ளது. அங்கு நேற்று மட்டும் 430 பேர் இறந்த நிலையில் இதுவரை மொத்தமாக 21,282 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளார்கள். 4வது இடத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டில் நேற்று மட்டும் 531 பேர் உயிரிழந்ததால் அங்கு பலி எண்ணிக்கை 20,796 ஆக அதிகரித்துள்ளது.

பெல்ஜியம் 6வது இடம்
5வது இடத்தில் இங்கிலாந்து உள்ளது. அங்கு நேற்று ஒரு நாளில் மட்டும் 828 பேர் உயிரிழந்தனர். இதனால் இதுவரை இங்கிலாந்தில் கொரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 17,337 ஆக உயர்ந்துள்ளது. 6வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தில் நேற்று 170 பேர் இறந்த நிலையில் பலி எண்ணிக்கை 5,998 ஆக அதிகரித்துள்ளது.

ஜெர்மனி 8வது இடம்
அதிக மரணத்தை சந்தித்த நாடுகள் பட்டியலில் 7வது இடத்தில் ஈரான் உள்ளது. அங்கு நேற்று 88 பேர் புதிதாக இறந்த நிலையில் உயிரிழப்பு 5,297 ஆக அதிகரித்துள்ளது. 8வது இடத்தில் உள்ள ஜெர்மனியில் நேற்று 224 பேர் பலியான நிலையில், ஒட்டுமொத்தமாக அங்கு கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 5086 ஆக உயர்ந்துள்ளது. 9வது இடத்தில் சீனா உள்ளது அங்கு 4,632 பேர் இதுவரை கொரோனாவால் மரணத்தை தழுவி உள்ளதாக அரசு கூறியுள்ளது. 10வது இடத்தில் நெதர்லாந்து உள்ளது . அங்கு நேற்று ஒரு நாளில் 165 பேர் இறந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 3,916 ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications