விண்வெளியில் கால்பந்து பைனலை 'லைவ்' ஆக பார்த்த வீரர்கள்: வானில் கொண்டாடிய ஜெர்மன் விண்வெளி வீரர்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: உலக கோப்பை கால்பந்து போட்டி வெறி, எந்த அளவுக்கு மிதமிஞ்சி போயுள்ளது என்பதற்கு வானில் ஒரு உதாரணம் இருக்கிறது. வானிலா என்று ஆச்சரியப்பட வேண்டாம். உண்மைதான் அது. விண்வெளியில் அமைக்கப்பட்டுள்ள நாசாவின் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தில் இருந்தபடி உலக கோப்பை கால்பந்தாட்டத்தின் இறுதி போட்டியை நேரடியாக பார்த்து ரசித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

ஈர்ப்பு விசைக்கு அப்பால் ஆய்வு நிலையம்

ஈர்ப்பு விசைக்கு அப்பால் ஆய்வு நிலையம்

அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவினால் பூமியில் இருந்து 230 மைல் உயரத்தில் புவியீர்ப்பு விசைக்கு அப்பால் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு நிலையத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் ரீய்ட் வைஸ்மேன், ஸ்டீவ் ஸ்வான்சன் மற்றும் ஜெர்மனியின் அலெக்சாண்டர் கெர்ஸ்ட் மற்றும் ஒரு விஞ்ஞானி ஆகியோர் பணியாற்றி வருகிறார்கள்.

கால்பந்தாட்ட கவலை

கால்பந்தாட்ட கவலை

கால்பந்து ரசிகர்களாக இம்மூவரும் விண்வெளியில் பணிநிமித்தமாக சிக்கிக்கொண்டதால் எப்படி இதை நேரடியாக பார்ப்பது என்ற கவலையில் ஆழ்ந்தனர். இந்த கவலையை நாசாவிடமும் கூறினர். இவர்கள் கவலையை தீர்க்க நாசா முன்வந்தது.

இறுதி போட்டி நேரடி ஒளிபரப்பு

உலக கோப்பை இறுதி போட்டியில் ஜெர்மனியும், அர்ஜென்டினாவும் மோதிய போட்டியை விண்வெளியில் இருந்தபடி நேரடியாக விஞ்ஞானிகள் பார்க்க நாசா ஏற்பாடு செய்தது. நாசா மற்றும் விஞ்ஞானிகள் குழு தகவல் தொடர்புக்கு பயன்படுத்தும் லேப்டாப் வழியாக நேரடி ஒளிபரப்பை காண்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

ஜெர்மனியின் வெற்றி கொண்டாட்டம்

ஜெர்மனியின் வெற்றி கொண்டாட்டம்

அதேபோல ஞாயிற்றுக்கிழமை நடந்த உலக கோப்பை இறுதி போட்டியை விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்தபடி (பறந்தபடி) விஞ்ஞானிகள் மூவரும் நேரடியாக கண்டு ரசித்தனர். ஜெர்மனி வெற்றி பெற்றதும், விண்வெளியில் இருப்பதையும் மறந்துவிட்டு அந்த நாட்டை சேர்ந்த விஞ்ஞானியான அலெக்சாண்டர் கெர்ஸ்ட் போட்டாரே பார்க்க வேண்டும் ஆட்டம்... அமெரிக்க விஞ்ஞானிகள் வாயடைத்து போய்விட்டனர்.

விண்வெளியில் கால்பந்தாட்டம்

விண்வெளியில் கால்பந்தாட்டம்

விண்வெளி நிலையத்தில் கால்பந்து ஒன்றை வைத்துக்கொண்டு மூவரும் விளையாடுவது போலவும் அந்த வீடியோவில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. விண்வெளியில் ஈர்ப்பு விசை கிடையாது என்பதால், விண்வெளி வீரர்கள் அதிகப்படியாக உடற்பயிற்சி செய்ய வேண்டியது அவசியம். அப்படி செய்யாவிட்டால், பூமிக்கு வந்ததும், அவர்கள் சதைகளில் முறிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே கால்பந்தை வைத்துக்கொண்டு விளையாடுவதன் மூலம், பொழுது போக்கு மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் ஒரே நேரத்தில் நிகழுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இது அல்லவோ அனுபவம்

விஞ்ஞானிகள் தங்கள் அனுபவத்தை வீடியோவாக பதிவு செய்து அதை யூடூப்பிலும் பதிவேற்றம் (அப்லோட் ) செய்துள்ளனர். போட்டி தொடங்கியபோது பதிவான அந்த வீடியோவில் அலெக்சாண்டர் கெர்ஸ்ட், பேசுகையில், "பிரேசில் மைதானத்தில் குவிந்துள்ள அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் நாங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். சிறப்பான போட்டியாக நடைபெற வாழ்த்துக்கள். மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் விளையாட்டை ரசியுங்கள். சிறப்பான அணி வெற்றி பெறும்" என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+