"சூடாகும் பூமி.." இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்ட வெப்பம்.. சர்வதேச ஆய்வாளர்கள் பகீர்
பாரீஸ்: மனித வரலாற்றிலேயே ஜூன் மாதம் இதுவரை இல்லாத வகையில் வெப்பம் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட காரணங்களால் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத வகையில் இந்தாண்டு கோடை வெப்பம் உச்சம் தொட்டிருந்தது.
தமிழ்நாட்டில் பல இடங்களிலும் வெப்பம் 100 டிகிரியை அசால்டாக தாண்டியது. இதனால் மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வரவே சிரமப்பட்டனர். கோடை வெயில் முடிந்தாலும் இன்னும் பல இடங்களில் வெப்பம் உச்சத்திலேயே இருக்கிறது.
வெப்பம் உச்சம்: இதற்கிடையே மனித வரலாற்றில் ஜூன் மாதம் இதுவரை இல்லாத வகையில் சராசரி வெப்பம் உச்சத்தில் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை கண்காணிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது வெப்பம் கணிசமாக உயர்ந்துள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. எல் நினோ காலநிலை நிகழ்வு ஆரம்பித்துள்ள நிலையில், தீவிர வானிலை மற்றும் அதிக வெப்பம் அடிக்கடி நிகழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து C3S அமைப்பின் துணை இயக்குநர் சமந்தா பர்கெஸ் கூறுகையில், "இதுவரை இல்லாத வகையில் உலகம் அதன் வெப்பமான ஜூன் முதல் வாரத்தில் பதிவு செய்துள்ளது. கடந்த மே மாதத்துடன் ஒப்பிடும் போது, வெப்பம் 0.1 டிகிரி செல்சியஸ் குறைந்துள்ளது. இருப்பினும், ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இதுவரை ஜூன் வாரம் இந்தளவுக்கு வெப்பம் அதிகமாக இருந்தது இல்லை. இந்தாண்டு ஜூன் தொடக்கத்தில் உலகளவில் மேற்பரப்புக் காற்றின் வெப்பம் என்பது இதுவரை பதிவானதில் கணிசமாக அதிகமாக உள்ளது" என்று அவர் தெரிவித்தார்.
தலைவலி: புவி வெப்ப மயமாதல் என்பது மிக பெரிய தலைவலியாக மாறி வருகிறது. ஏற்கனவே கடந்த மே மாதம் பெருங்கடல்கள் இதுவரை இல்லாத வகையில் வெப்பமாக இருந்ததாக கோப்பர்நிக்கஸ் கிளைமேட் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஜூன் மாத தொடக்கத்தில், பூமியின் வெப்பம் 1.5C (34.7 டிகிரி பாரன்ஹீட்) அதிகமாக இருந்துள்ளது. அதாவது 2015 பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் வைத்த இலக்கை இது மீறியுள்ளது.
கடந்த ஜூன் 7-11 வரை பூமியின் சராசரி வெப்பம் 1.5C அதிகமாக இருந்துள்ளது. குறிப்பாக ஜூன் 9ஆம் தேதி இது 1.69C வரை அதிகமாக இருந்தது. ஜூன் மாதத்தில் பாரீஸ் ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட அளவுக்கு வெப்பம் அதிகரிப்பது இதுவே முதல்முறையாகும். அதேநேரம் கடந்த சில ஆண்டுகளாகவே குளிர் மற்றும் மழைக் காலங்களில் பல முறை வெப்பம் இதைக் காட்டிலும் அதிகரித்துள்ளது.
எல் நினோ: பூமியின் வெப்ப நிலை ஒவ்வொரு டிகிரி அதிகரித்தாலும் கூட அது பருவநிலை மாற்றத்தில் மிக மோசமான ஆபத்தை ஏற்படுத்தும். இதற்கிடையே இப்போது எல் நினோ நிகழ்வும் ஏற்பட்டுள்ள நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.
எல் நினோ நிகழ்வின் போது, மத்திய மற்றும் கிழக்கு பசிபிக் பெருங்கடலில் வெப்பம் சராசரியை விட அதிகமாக இருக்கும். கடந்த 2018-19 காலகட்டத்தில் கடைசியாக இதுபோன்ற நிகழ்வு ஏற்பட்டது. இது சராசரியாக ஒவ்வொரு 2-7 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும். இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து வெப்பமான காலங்களும் எல் நினோ காலத்திலேயே பதிவு செய்யப்பட்டவையாகும். இதனால் எல் நினோ நீட்டிக்கும் வகை இந்தாண்டும் வெப்பம் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications