கொடிய “பிரேசில் வாண்டரிங் சிலந்தி”யை பிடிக்க மூடப்பட்ட இங்கிலாந்து சூப்பர் மார்க்கெட்!
லண்டன்: இங்கிலாந்தின் சூப்பர் மார்க்கெட் ஒன்று வாழைப்பழத்தில் இருந்த சிலந்தியைப் பிடிப்பதற்காக மூடப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பினை ஏற்படுத்தியது.
இங்கிலாந்தின் லீஸ்செஸ்டெர்ஷர் கவுண்டியில் உள்ள அல்டி ஸ்டோர் என்ற சூப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.
அங்கு தன் குடும்பத்திற்குத் தேவையான மளிகைப்பொருட்களை வாங்குவதற்காக பெண் ஒருவர் சென்றிருந்தார்.

உலகின் கொடிய சிலந்தி:
அங்கு வாழைப்பழங்களை வாங்கிய அவர் அதில் உலகின் கொடிய விஷ சிலந்தியான பிரேசில் வாண்டரிங் சிலந்தியின் கூடு இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

போலீசில் புகார்:
அந்தக் கூட்டுக்குச் சொந்தமான சிலந்தி அந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள்தான் இருக்கும் என்பதால் அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற அக்கறையில் உடனடியாக போலீசில் புகாரளித்தார்.

மூடப்பட்ட சூப்பர் மார்க்கெட்:
இதையடுத்து, நேற்று காலை முதலே அந்த சூப்பர் மார்க்கெட் மூடப்பட்டது. வனத்துறை நிபுணர்கள் அந்த சூப்பர் மார்க்கெட்டிற்குள் சிலந்தியை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

ஓடிவிட எச்சரிக்கை:
பொதுமக்கள் ஒருவேளை அந்த சிலந்தியைப் பார்த்தால் அதை மற்ற சிலந்திகளைப் போல் அடிக்கும் காரியத்தில் ஈடுபடாமல் முடிந்த அளவு சீக்கிரமாக அந்த இடத்தை விட்டு ஓடி விடுமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications