4 லட்சத்து 30 ஆயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்துள்ளது மனித இனத்தின் முதல் கொலை! ஆய்வில் பரபரப்பு
லண்டன்: 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மனித இனத்தில் முதல் கொலை நடந்துள்ளது. அந்த கொலை குறித்த துப்பு தற்போது கிடைத்துள்ளது.
ஸ்பெயின் நாட்டின் சிமா டி லோஸ் ஹுசோஸ் பகுதியில், அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குழுவினருக்கு அபூர்வமான ஒரு பொருள் தென்பட்டது.
அந்த பொருள் 13 மீட்டர் பள்ளத்தில் கிடந்தது. அது வேறு எதுவுமல்ல, மனிதனின் மண்டை ஓடு. மனித மண்டை ஓடுகள் கிடைப்பதில் என்ன அபூர்வம் இருந்துவிட போகிறது என்று நினைக்கலாம். ஆனால், இந்த மண்டை ஓடு பிறவற்றைவிட வித்தியாசமானது.
இதுகுறித்து அகழ்வாராய்ச்சியாளர்கள், பிளோஸ்ஒன் என்ற இதழில் ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ள சுவாரசிய தகவல்கள் இதுதான்:
நாங்கள் கண்டெடுத்த மண்டை ஓட்டின் இடது கண்புறத்துக்கு மேல் இரு ஓட்டைகள் இருந்தன. அது கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் ஏற்பட்ட ஓட்டை. எனவே, இது ஒரு கொலை என்ற முடிவுக்கு வந்துள்ளோம். இந்த மண்டை ஓடு, 4 லட்சத்து 30 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையது என்பதால், மனித இனத்தின் முதல் கொலை அப்போது நடந்துள்ளதற்கான ஆதாரமாக இதை பார்க்கிறோம்.
அந்த மண்டை ஓட்டுக்குறிய மனிதன், எதிலாவது மோதி கொண்டு செத்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில், மோதியிருந்தால் ஒரு ஓட்டைதான் இருந்திருக்கும். இதிலோ, இரு முறை மண்டை ஓடு துளைக்கப்பட்டுள்ளது. ஒரே பொருளை கொண்டுதான், இருமுறையும் மண்டை ஓடு துளைக்கப்பட்டுள்ளது. எனவே இது கொலையே.
எதிரில் இருந்து ஒரு மனிதன் கூரிய ஆயுதத்தால் இவரை தாக்கி கொலை செய்துள்ளான். அந்த மனிதன் வலது கை பழக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும். எனவேதான், அவன் இடது கண்ணுக்கு மேல் குத்தி கொன்றுள்ளான். இவ்வாறு அந்த ஆய்வு கட்டுரை நீள்கிறது. இந்த மண்டை ஓடு எடுக்கப்பட்ட சுரங்க பள்ளத்தில் மேலும் 28 மண்டை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றில் எந்த காயங்களும் இல்லை. கொலையான மனிதன் புதையுண்ட இடத்தில் பிற்காலத்தில் இந்த மண்டை ஓடுகளுக்குறியவர்களும் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications