செயற்கை இதயத்துடன் 100 நாட்களுக்கும் மேல் வாழ்ந்த நோயாளி! சாதனை படைத்த மருத்துவர்கள்
கான்பெர்ரா: இதய செயலிழப்பால் பாதிக்கப்பட்டவருக்கு செயற்கை இதயத்தை பொருத்தி ஆஸ்திரேலிய மருத்துவர்கள் சாதனை புரிந்திருக்கிறார்கள். செயற்கை இதயம் உலகின் பல நாடுகளில் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் 100 நாட்களுக்கும் மேல் வாழ்ந்தது கிடையாது.
ஆஸ்திரேலியா மருத்துவர்கள் செயற்கை இதயம் பொறுத்தப்பட்ட நோயாளியை 100 நாட்களுக்கும் மேல் வாழ வைத்திருக்கிறார்கள். மட்டுமல்லாது நோயாளியை மருத்துவமனையிலிருந்து செயற்கை இதயத்துடன் டிஸ்சார்ஜும் செய்திருக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த 40 வயது நபருக்கு கடந்த நவம்பர் மாதம் இதயம் திடீரென செயலிழந்தது. உடனடியாக அவர் சிட்னியில் உள்ள 'புனித வின்சென்ட்' மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு BiVACOR Total Artificial Heart என்ற உயர் தொழில்நுட்ப செயற்கை இதயம் பொருத்தப்பட்டது. சுமார் 650 கிராம் எடை கொண்ட செயற்கை இதயம் டைட்டானியம் உலோகத்தால் செய்யப்பட்டிருக்கிறது. உடலின் ஒரு அங்கம் போல, இயற்கையான இதயதம் போல இது இருக்கும்.
இது உடலின் அனைத்து பாகங்களுக்கும் ரத்தத்தை பம்ப் செய்து அனுப்பும். இதற்காக சிறிய பேட்டரி ஒன்று பொருத்தப்பட்டிருக்கிறது. இதனை ரீசார்ஜ் செய்ய முடியும். 12 வயது சிறுவர்களுக்கு கூட பொருந்தும் அளவுக்கு இந்த செயற்கை இதயம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்காவிலும் இன்னும் சில நாடுகளிலும் ஏற்கெனவே இதுபோன்ற செயற்கை இதயம் நோயாளிகளுக்கு பொருத்தப்பட்டிருக்கிறது. ஆனால் அவர்கள் இன்னமும் மருத்துவமனையில்தான் இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் 100 நாட்களுக்கும் மேலாக உயிர் வாழ்ந்திருக்கிறார். எனவே மருத்துவர்கள் அவரை செயற்கை இதயத்துடன் டிஸ்சார்ஜ் செய்திருக்கின்றனர். உலகிலேயே முதல் முறையாக இந்த செயற்கை இதயத்துடன் மருத்துவமனையை விட்டு வெளியேறிய முதல் நோயாளியாக இவர் அறியப்படுகிறார்.
இது குறித்து அந்நாட்டு மருத்துவர்கள் கூறுகையில், "ஆஸ்திரேலிய உயிரியல் பொறியாளர் டேனியல் டிம்ஸ் என்பவர்தான் செயற்கை இதயத்தை கண்டுபிடித்தார். சிறுவயதிலிருந்தே அவருடைய தந்தையுடன் குழாய் மற்றும் நீர்ப்பம்புகளைக் கொண்டு ஆராய்ச்சி செய்த அனுபவத்தை இவர் பெற்றிருக்கிறார். இவரது தந்தையும் இதய பிரச்சனையால்தான் உயிரிழந்தார். எனவே, இதய பிரச்சனையால் பாதிக்கப்படுபவர்களை காப்பாற்ற இந்த செயற்கை இதயத்தை கண்டுபிடித்திருக்கிறார்.
இனி வரும் காலங்களில் வயர்லெஸ் சார்ஜர் மூலம் இந்த இதயம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்படும். எங்கள் நாட்டின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சையும் இதே மருத்துவமனையில்தான் நடந்தது. இந்த மருத்துவமனையில் செயற்கை இதயம் பொருத்தப்பட்ட நபர் நீண்ட நாட்கள் வாழ வைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது அவருக்கு உறுப்பு தானம் மூலமாக மற்றொருவரின் இதயம் பொருத்தப்பட்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.
இந்த செயற்கை இதயத்தில் இன்னும் சில மேம்பாடுகள் செய்ய வேண்டியது இருக்கிறது என்று கூறும் மருத்துவர்கள், இது சாமானிய மக்களின் பயன்பாட்டுக்கு வர மேலும் சில ஆண்டுகள் ஆகலாம் எனவும் தெரிவித்திருக்கின்னறர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications