153 கிலோ கொண்ட மெகா சைஸ் சமோசா செய்து கின்னஸ் சாதனை
லண்டனில் முஸ்லிம் அமைப்பு ஒன்று 153 கிலோ சைஸ் கொண்ட சமோசாவை தயாரித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
லண்டன்: லண்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பு ஒன்று கடந்த மாதம் தயார் செய்த 153 கிலோ எடை கொண்ட மெகா சைஸ் சமோசாவை தயார் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது.
லண்டனில் உள்ள முஸ்லிம் அமைப்பினர் கடந்த மாதம் மிக பெரிய அளவிலான சமோசாவை தயார் செய்துள்ளனர். இது 153 கிலோ எடை கொண்டது.

இதில் 100 கிலோ உருளைக்கிழங்கு, 25 கிலோ வெங்காயம், 15 கிலோ பட்டாணி, 44 கிலோ மைதா மாவு மற்றும் இந்தியாவின் பாரம்பரிய மசாலாக்கள் சேர்க்கப்பட்டன.
இந்த சமோசா முக்கோண வடிவில் செய்யப்பட்டு கிழக்கு லண்டன் மசூதியில் பொரிக்கப்பட்டது. பின்னர் 100 துண்டுகளாக போடப்பட்ட இந்த சமோசா வீடில்லாதோருக்கு வழங்கப்பட்டது.
A post shared by Muslim Aid HQ (@muslimaid) on
கடந்த 2012- ஆம் ஆண்டு பிராட்போர்டு கல்லூரியினர் 110.8 கிலோ எடை கொண்ட சமோசாவை செய்திருந்தனர். இந்த சாதனையை முஸ்லிம் அமைப்பினர் முறியடித்தனர். பின்னர் இவர்களது சாதனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.












Click it and Unblock the Notifications