Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அடடே என்ன அழகு! இவங்க போலீஸ்னா.. எத்தனை தடவ கூட அரஸ்ட் ஆகலாமே!" உச்சு கொட்டும் இளசுகள்! யாரும்மா நீ

Subscribe to Oneindia Tamil

கொலம்பியா: போலீசார் என்றாலே அலறி தெறிக்கும் நம்ம ஊர் இளைஞர்கள் மத்தியில், இந்த காவலருக்கு ஹார்டின்களை அள்ளி விடுகிறார்கள் இளைஞர்கள்.

போலீசார் உங்கள் நண்பன் என்று என்ன தான் மைக் போட்டு சொன்னாலும் கூட, பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கிறது.

இன்னும் கூட போலீஸ் என்றாலே இரண்டடி தள்ளித்தான் பொதுமக்கள் நிற்கிறார்கள். அந்தளவுக்கு போலீசார் மீதான பயம் இங்கு இருந்து கொண்டு தான் இருக்கிறது.

போலீசார்

போலீசார்

வண்டி ஓட்டிச் செல்லும் போது கூட போலீசாரை பார்த்த உடன் இளைஞர்கள் தெறித்து ஓடுவார்கள். எல்லா ஆவணங்களும் இருந்தாலும் கூட பணம் கேட்பார்கள் என்பது இளைஞர்கள் சொல்லும் வாதமாக உள்ளது. உலகின் கிட்டதட்ட அனைத்து நாடுகளிலும் கூட போலீசாருக்கும் பொதுமக்கள் அதிலும் குறிப்பாக இளைஞர்களுக்கும் இடையே இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கும்.

கொலம்பியா

கொலம்பியா

எங்காவது தாங்கள் கைதாக வேண்டும் என்று இளைஞர்கள் கூறி பார்த்து உண்டா? இதுபோன்ற ஒரு காட்சி கனவிலும் நடக்காது என்று நீங்கள் கூறலாம். ஆனால், உண்மையில் தென் ஆப்பிரிக்க நாடான கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இளைஞர்கள் இதற்காக ஆர்வமாக உள்ளனராம். அதிலும் போலீஸ் அதிகாரியான டயானா ராமிரெஸ் தான் தங்களைக் கைது செய்ய வேண்டும் என்று ஆசையாகச் சொல்கிறார்கள்.

டயானா

டயானா

அப்படிச் சொல்ல என்ன காரணம்? யார் இந்த டயானா எனக் கேட்கிறார்களா? வாங்கப் பார்க்கலாம்.. உலகின் "மிக அழகான போலீஸ்காரர்" என்று அழைக்கப்படுபவர் டயானா.. இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு சுமார் 4 லட்சம் ஃபாலோயர்ஸ்கள் உள்ளனர். உலகின் மிகவும் ஆபத்தான நகரங்களில் ஒன்றான மெடலின் நகரில் பெண் ஒருவர் போலீசாக இருப்பதில் உள்ள சிக்கல்கள் அவர் தனது சமூக வலைத்தளங்களில் ஆவணப்படுத்தி வருகிறார்.

 சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்கள்

சமூக வலைத்தளங்களில் லட்சக் கணக்கான ஃபாலோயர்களை கொண்டிருந்தால் பலரும் அதில் வரும் வருமானத்தை வைத்துக் கொண்டே ஜாலியாக இருப்பார்கள். ஆனால், டயானா எப்போதும் போலீஸ் வேலையிலேயே கண்ணும் கருத்துமாக உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "எனக்கு மாடலாகும் வாய்ப்பும் கூட வந்தது. ஆனால், எனக்கு அதையெல்லாம் விடக் குற்றத்தை எதிர்த்துப் போராடுவதில் தான் விருப்பம் உள்ளது.

 எப்போதும் போலீஸ் தான்

எப்போதும் போலீஸ் தான்

இப்போது மாடலாகும் வாய்ப்பு வந்தாலும் கூட அதை நான் ஏற்க மாட்டேன். மீண்டும் போலீஸ் வேலையையே தேர்வு செய்வேன். ஏனென்றால் போலீசாக இருப்பதே எனது ஆசை. அதில் தான் எனக்குப் பெருமை" என்று கூறி கண்களை படபடவென சிமிட்டுகிறார். டிஜிட்டல் பிரபலங்களுக்கு விருந்து வழங்கும் இன்ஸ்டாஃபெஸ்ட் விருதுகளில், டயானாவின் பெயர் "ஆண்டின் சிறந்த போலீசார்" என்ற விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 அர்ப்பணிப்பு

அர்ப்பணிப்பு

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், "என்னைப் பொறுத்தவரை, இந்த விருது எங்கள் நாட்டு போலீசாருக்கே கிடைத்த மரியாதையாகவே கருதுகிறேன். இதற்காக நான் சந்தோசப்படுகிறேன். ஒறு சிறந்த நாட்டை கட்டியெழுப்ப நாங்கள் எந்தளவுக்குக் கஷ்டப்படுகிறோம் என்பது மக்களுக்குத் தெரிகிறது. இது போலீசார் எந்தளவுக்கு அர்ப்பணிப்புடன் உள்ளனர் என்பதை மக்களுக்குக் காட்ட உதவுகிறது" என்றார்.

 உச்சுகொட்டும் நெட்டிசன்கள்

உச்சுகொட்டும் நெட்டிசன்கள்

இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீசாக இவர் மேற்கொள்ளும் பணிகளின் படங்களை ஃபோட்டோக்களாக எடுத்துப் பதிவிட்டு வருகிறார். மேலும், பல சில் செய்யும் படங்களையும் பகிர்ந்து உள்ளார். இதைப் பார்த்து ஹார்டின்களை அள்ளிவிடும் இளசுகள், இவர் போலீசார் என்றால் எப்போதும் கைதாக ரெடி என உச்சுகொட்டி வருகின்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+