ஒரு தலையணை விலை ரூ. 45 லட்சமா.. விலையைக் கேட்டா தூக்கம் இல்லை.. மயக்கமே வருதே!
ரூ. 45 லட்சம் விலையில் உலகின் விலை உயர்ந்த தலையணையை கண்டுபிடித்துள்ளது நெதர்லாந்து நிறுவனம் ஒன்று.
ஆம்ஸ்டர்டாம்: நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு உகந்தது என தங்கம், வைரம் பதித்த தலையணை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது நெதர்லாந்தைச் சேர்ந்த தலையணை தயாரிக்கும் நிறுவனம் ஒன்று. அதன் விலையைக் கேட்டால் நிச்சயம் நம்மால் நிம்மதியாக தூங்க முடியாது...
'மெத்தை வாங்கினேன்.. தூக்கத்தை வாங்கல..' இதுதான் இன்று நம்மில் பலரது முக்கியப் பிரச்சினை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, மாறிப் போன வாழ்க்கை முறைக்கு நாம் கொடுத்திருக்கும் பெரிய விலை தூக்கம். இரவில் சரியான நேரத்திற்கு நன்கு உறங்க முடியாமல் போவதால், பல வியாதிகள் தாமாகவே வந்து ஒட்டிக் கொள்கின்றன. சிகிச்சைக்கு மருத்துவர்களிடம் சென்றால், அவர்கள் கூறும் முதல் அறிவுரை நன்றாகத் தூங்குங்கள் என்பதுதான்.
ஆனால் நிம்மதியாகத் தூங்க, தலையணைக்கு மட்டும் அரை கோடி ரூபாய் செலவாகும் என அதிர்ச்சித் தருகிறது நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று.

45 லட்சம்
நெதர்லாந்தைச் சேர்ந்த பிசியோதெரப்பிஸ்ட்டான திஜிஸ் வான் டெர் ஹில்ஸ்ட் (Thijs van der Hilst) என்பவரால் 1978ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் வான் டெர் ஹில்ஸ்ட் என்ற தலையணை நிறுவனம். இது கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு ஆராய்ச்சிகளைச் செய்து, உலகின் விலை உயர்ந்த தலையணை ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்தத் தலையணையின் விலை 57,000 டாலர். அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 45 லட்சம்.

15 வருட ஆராய்ச்சி
இவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு அந்தத் தலையணையில் என்ன இருக்கிறது என நீங்கள் ஆச்சர்யப்படலாம். தூக்க நிபுணர்கள், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் என குழுவாகச் சேர்ந்து இந்தத் தலையணையைப் பார்த்து, பார்த்து உருவாக்கியுள்ளனர். ஒரு மனிதனின் நிம்மதியான உறக்கத்திற்கு என்னென்ன தேவைப்படும் என பல்வேறு ஆய்வுகளை நடத்தி, இந்த தலையணையை அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

வைரக்கற்கள்
ரோபோட்டிக் மில்லிங் மிஷினால் பஞ்சுகள் நிரப்பப்பட்டுள்ள இந்த தலையணையின் ஜிப்பில் நான்கு வைரக்கற்கள் பதிக்கப்பட்டுள்ளது. மல்பெரி பட்டு, எகிப்திய பருத்தி மற்றும் 24 காரட் தங்க துணி ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த தலையணையை உருவாக்கியுள்ளனர். விலையுயர்ந்த இந்தத் தலையணையை வைத்துக் கொள்வதற்கு என பிரத்யேகமாகப் பெட்டி ஒன்றையும் தயாரித்துள்ளனர்.

இன்சோம்னியாவுக்கு நல்லது
இன்சோம்னியா எனப்படும் தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, இந்த தலையணை மிகவும் உதவிகரமானதாக இருக்கும் என்கிறார்கள் வான் டெர் ஹில்ஸ்ட் நிறுவனத்தினர். தற்போது இந்த தலையணை பற்றிய செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது.என்னதான் சிறப்பம்சங்கள் இருந்தாலும், ஒரு தலையணையை இவ்வளவு பணம் கொடுத்து வாங்குவதா என ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர் நெட்டிசன்கள்.

ரொம்ப காஸ்ட்லி பாஸ்
'நாங்களாம் கட்டாந்தரையில் ஒரு துண்டை விரித்து, கண்ணில் தூக்கம் சொக்க வைக்குற உழைப்பாளிகள் சார்.. எங்களுக்கெல்லாம் இந்த தலையணை தேவையே இல்லை' என ஒரு தரப்பு இந்த செய்தியைப் பகிர்ந்து கமெண்ட் வெளியிட, மற்றொரு தரப்போ, 'இவ்வளவு காஸ்ட்லியா தலையணை வாங்கினால், அதை நிம்மதியாக தலைக்கு வைத்து தூங்க முடியுமா? நன்றாக ஆழ்ந்து உறங்கும்போது யாராவது உருவி விடுவார்களோ..என பயத்திலேயே நிம்மதியாக தூக்க முடியாதே..' என பிராக்டிகலாக பீல் செய்துள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications