பிரெக்ஸிட் வாக்கெடுப்பு: அப்பாடா.. பிரிட்டன் போனதே நல்லது!- ரஷ்யா

Subscribe to Oneindia Tamil

லண்டன்: ஐரோப்பிய யூனியலிருந்து பிரிட்டன் பிரிந்து சென்றதற்கு பல்வேறு நாடுகளும் கருத்து தெரிவித்துள்ளன.

ஐரோப்பிய யூனியனின் தலைவர் டொனால்ட் டஸ்க் கூறுகையில், "இனி நாம் 27 நாடுகள்தான். இந்த நாடுகளுக்குள் ஒற்றுமை காப்பாற்றப்பட வேண்டும். அடுத்து என்ன நடவடிக்கை, எதிர்காலத் திட்டங்கள் குறித்து அடுத்த வாரம் நடக்கும் உச்சி மாநாட்டில் பேசலாம். அதில் பிரிட்டன் இருக்காது," என்று தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ்

பிரான்ஸ்

பிரான்ஸின் வலது சாரிக் கட்சி, பிரெக்ஸிட் முடிவை வரவேற்றுள்ளது. பிரிட்டனைப் போன்ற ஒரு முடிவை பிரான்சும் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. மக்களின் சுதந்திரம் வென்றதாக அந்நாட்டின் பாபுலிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.

ஜெர்மனி

ஜெர்மனி

ஐரோப்பாவுக்கு இது மிகவும் மோசமான நாள் என்று ஜெர்மனியின் அயலுறவுத் துறை அமைச்சகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ரஷ்யா

ரஷ்யா

ரஷ்ய அரசு சார்பில் எந்த ரியாக்ஷனும் இல்லை என்றாலும், அந்நாட்டு மீடியாக்கள் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறிது ஐரோப்பாவுக்கு நல்லது எனக் கொண்டாடுகின்றன. காரணம், இனி ஐரோப்பாவில் அமெரிக்காவின் தலையீடு குறையும் என்று கூறியுள்ளனர்.

"ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டனுக்கு விடுதலை கிடைக்கவில்லை. பிரிட்டனிடமிருந்தும் அவர்களின் கூட்டாளி அமெரிக்காவிடமிருந்தும் ஐரோப்பாவுக்கு விடுதலை கிடைத்துள்ளது. இனி யூரோப் யுரேசியாவாகத் திகழும்," போரிஸ் டிடோவ் கூறியுள்ளார். இவர் ரஷ்ய அதிபர் புடினின் ஆலோசகர் என்பது குறிப்பிடத்தக்கது.

இத்தாலி

இத்தாலி

பிரிட்டன் எப்போதுமே முழு மனதோடு ஐரோப்பிய யூனியனில் இருந்ததில்லை. அது ஒரு காலை உள்ளேயும் ஒரு காலை வெளியிலும்தான் வைத்திருந்தது. வெளியேறியது நல்லதுதான். ஆனால் மேலும் உடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று இத்தாலி ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

அயர்லாந்து

அயர்லாந்து

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரிந்தது பல முக்கிய விளைவுகளை ஏற்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. அயர்லாந்துக்கும் இந்த பாதிப்பு இருக்கும். இதுகுறித்து விரைவில் அமைச்சரவை கூடிப் பேசும் என்று அந்நாடு கருத்து தெரிவித்துள்ளது.

டென்மார்க்

டென்மார்க்

பெரும்பான்மை பிரிட்டிஷ் மக்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். ஆனால் ஐரோப்பிய சரித்திரத்தில் இது மோசமான நாள் என்ற என் எண்ணத்தை மறைக்க விரும்பவில்லை, என்று டென்மார்க் பிரதமர் லார்ஸ் லொக்கே ரஸ்முஸென் (Lars Lokke Rasmussen) கூறியுள்ளார்.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் பிரியக் கூடாது என்பதுதான் அமெரிக்க நிலைப்பாடு. ஆனால் மக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பதாகக் கூறிவிட்டது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் கூறுகையில், "யூனியனை விட்டு வெளியேறினாலும் சுதந்திரமான வர்த்தகத்தை பிரிட்டன் தொடரும் என நம்புகிறேன்," என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+