உலகிலேயே 2வது ராட்சத பள்ளம்.. மெக்சிகோ கடலில் கண்டுபிடிப்பு.. blue holes-களால் என்ன ஆபத்து?
மெக்சிகோ: வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள கடலில் 900 அடி ஆழமுள்ள பள்ளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளம் உலகின் இரண்டாவது பள்ளமாக அறியப்படுகிறது.
நீல துளை என்பது ஒரு பெரிய கடல் குகை அல்லது புதைக் குழி ஆகும். இது போன்ற நீல துளை ஆற்று மணல்களிலும் தீவுகளிலும் காணப்படும். நீல துளைகள் என்பவரை பனி காலங்களில் (Ice Age) பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானது, அதாவது தற்போது இருக்கும் கடல் மட்டத்தின் அளவை விட 100 முதல் 120 மீட்டர் வரை குறைவாக இருந்தது.

இந்த துளை தண்ணீரின் மட்டம் உயர உயர மறைந்துவிட்டது. இது போன்ற துளைகளை மிகவும் ஆபத்து நிறைந்தவை. உலகிலேயே ஆழமான பள்ளம் தென் சீனாவில் 2016 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது 980 அடிஆழம் கொண்டதாகும்.
இந்த பள்ளத்திற்கு டிராகன் துளை என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தாற் போல் மெக்சிகோ கடற்கரையில் இரண்டாவது துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சேத்துமால் கடற்கரையில் இந்த துளை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது 1,47,000 சதுர அடியை கொண்டது. இதற்கு தாம் ஜா என பெயரிடப்பட்டுள்ளது (Taam Ja). மாயன் மொழியில் தாம் ஜா என்றால் ஆழமான தண்ணீர் என்ற அர்த்தமாகும்.

இந்த பள்ளத்தின் வாய் மட்டும் 15 அடியை கொண்டுள்ளது. இது 2021 இல் கண்டுபிடிக்கப்பட்டு2023 ஆம் ஆண்டு ஜேர்னலில் வெளியானது. இந்த ராட்சத பள்ளம் நீல நிறத்தில் இருப்பதால் இதை நீல துளை என்றும் பொதுவான பெயர் கொண்டு அழைப்பார்கள். தாவரங்கள் மற்றும் அவற்றின் இலைகள் கால போக்கில் அழுகி உருவாகும் பேக்டீரியாவால் அடர் நீல நிறம் உருவாகிறது. அதற்குள் சூரிய வெளிச்சம் புகாது.
இந்த ராட்சத பள்ளங்களில் ஆக்ஸிஜன் குறைவு. எனவே சுற்றுலா பயணிகள் வழித்தவறி நீந்திச் சென்றால் அவர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். அது போல் கப்பல்களும் இந்த பக்கம் சென்றுவிட்டாலும் ஆபத்தை ஏற்படுத்தும் என்கிறார்கள். இந்த பள்ளத்தை சுற்றிலும் கெட்ட நீர்தான் இருக்குமாம்.
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications