இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல.. பாகிஸ்தானும் கோபம்.. "மோடி அரசுக்கு" இம்ரான் கான் கண்டனம்
இஸ்லாமாபாத்: இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபர் சர்மாவின் கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், பாகிஸ்தானும் இந்த விவகாரத்தில் இந்தியாவை சாடியுள்ளது.
பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த நுபர் சர்மா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர். சமீபத்தில் இவர் தனியார் டிவி நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்தினர் மனம் புண்படும்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்திருந்தார்.
இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகத்தை அவமதிக்கும் வகையில் நுபர் சர்மா சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்தார். இது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

அதிருப்தி
நுபர் சர்மாவின் பேச்சு இணையத்தில் வைரலான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இவரது பேச்சைக் கண்டித்து உபி-இல் போராட்டம் நடைபெற்றது. இது திடீரென வன்முறையாக மாறியதில் சுமார் 40க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். உலக அளவிலும் பல்வேறு இஸ்லாமிய நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. கத்தார், குவைத் போன்ற நாடுகள் அங்குள்ள இந்தியத் தூதர்களை அழைத்து தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளன.

புறக்கணிப்பு
மேலும், இந்தியப் பொருட்களைப் புறக்கணிக்க வேண்டும் என்ற கோஷமும் அங்கு எழுந்துள்ளது. இருந்த போதிலும், இஸ்லாமிய நாடுகள் தொடர்ந்து இந்தியாவுக்கு கடும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றன. இப்போது இந்தப் பட்டியலில் பாகிஸ்தானும் இணைந்துள்ளது. அந்நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உள்ளிட்ட இந்த விவகாரத்தில் பாஜகவைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

உலக நாடுகள் நோட் செய்யுங்கள்
இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில், "நபிகள் நாயகம் பற்றி இந்தியாவின் பாஜக தலைவரின் புண்படுத்தும் கருத்துக்களை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மோடியின் கீழ் இந்தியா மதச் சுதந்திரங்களை மிதித்து, முஸ்லிம்களைத் துன்புறுத்துகிறது என்று பலமுறை கூறி வருகிறேன். உலக நாடுகள் இந்தியாவில் நடப்பத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும். நபிகள் நாயகம் மிக உயர்ந்தவர், அனைத்து முஸ்லிம்களும் தங்கள் இறைத்தூதர் மீதான அன்பு மற்றும் மரியாதைக்காக உயிரைக் கூட தியாகம் செய்ய தயாராக இருப்பார்கள்" என்று பதிவிட்டுள்ளார்

இம்ரான் கான்
அதேபோல பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் தனது ட்விட்டரில், "நமது இறைத்தூதர் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் நடத்திய வெறுக்கத்தக்கத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்தியாவில் உள்ள முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டுவது உள்ளிட்ட வெறுப்பு கொள்கையை மோடி அரசு வேண்டுமென்றே பின்பற்றி வருகிறது. இது பெரும் வேதனையான விஷயம். இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மோடியின் இந்தியா இஸ்லாமிய வெறுப்புக் கொள்கைகளில் இருந்து விடுபட வேண்டும்" என்று ட்வீட் செய்துள்ளார்.
Recommended Video

விளக்கம்
ஏற்கனவே, பல்வேறு மத்திய கிழக்கு நாடுகள் இந்தியாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், நுபர் சர்மாவை பாஜக ஏற்கனவே தற்காலிகமாகக் கட்சியில் இருந்து நீக்கி உள்ளது. மேலும், தனி நபர் ஒருவரின் கருத்தை ஒட்டுமொத்த தேசத்தின் கருத்தாக எடுத்துக் கொள்ளக் கூடாது என வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
-
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
அய்யோ.. அக்கவுண்டில் அநாமத்தாக வந்த 10 கோடி! ஒரே நொடியில் கோடீஸ்வரியான பெண்! உடனடியாக எடுத்த முடிவு -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications