லாட்டரியில் 16 ஆயிரம் கோடி அடித்தவரின் வாழ்க்கையில் விளையாடிய லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ.. போச்சு

Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகிலேயே லாட்டரியில் அதிக பரிசு வென்றவரான எட்வின் என்ற அதிர்ஷ்டசாலி, லாட்டரியில் அடித்த பணத்தை வைத்து லாஸ் ஏஞ்சல்சில் பிரம்மாண்ட சொகுசு மாளிகை ஒன்றை வாங்கியுள்ளார். பிரபலங்கள் நிறைந்துள்ள பகுதியில் வாங்கி போட்ட அந்த பங்களா லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயில் எரிந்து நாசம் ஆகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்சில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பற்றி எரிகிறது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள திரைப்பட நகரம் என்று அழைக்கப்படும் ஹாலிவுட் ஹில்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிகிறது. கடந்த 7-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸின் பாலிசேட்ஸ் பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது. காட்டுத்தீயால் இதுவரை 12-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

lottery america fire

வனப்பகுதியில் ஏற்பட்ட இந்தத் தீ கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான கட்டுமானங்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன . இதனால், லட்சக்கணக்கில் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி உள்ளனர். வெளியேற வேண்டிய கட்டாயத்தில் மேலும் பல லட்சம் மக்கள் உள்ளனர். காட்டுத்தீ காரணமாக பலரது வீடுகளும் தீக்கிரையாகின. காட்டுத்தியால் பல சொகுசு வீடுகளும், காட்டேஜ்களும் தீயில் எரிந்துள்ளன. குறிப்பாக, பாலிசேட்ஸ், ஈட்டன், அல்டாடெனா ஆகிய பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 10,000 வணிக கட்டடங்கள், 30,000 வீடுகள் தீயில் எரிந்து நாசமாகி உள்ளன.

இதில், உலகிலேயே லாட்டரியில் அதிக தொகை வென்றவரான எட்வின் காஸ்ட்ரோவின் வீடும் முற்றிலும் சேதம் அடைந்து இருக்கிறது. கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் லாட்டரியில் எட்வின் காஸ்ட்ரோவுக்கு பரிசு அடித்தது. அமெரிக்க டாலர் மதிப்பில் 2.04 பில்லியன் (இந்திய மதிப்பில் ரூ.16,590 கோடி) பரிசு விழுந்தது. உலகிலேயே லாட்டரியில் அதிக பரிசுத்தொகை வென்ற நபரான எட்வின் காஸ்ட்ரோ, தனக்கு விழுந்த பல ஆயிரம் கோடி பணத்தை வைத்து பல இடங்களில் முதலீடு செய்து இருக்கிறார்.

அந்த வகையில், மலிபு கேட்வே பகுதியில் 25.5 மில்லியன் டாலர் மதிப்பு கொண்ட சொகுசு பங்களா ஒன்றையும் வாங்கியுள்ளார். இந்த வீடுதான் தற்போது காட்டுத்தீயால் சேதம் அடைந்துள்ளதாம். காட்டுத்தீயால் முற்றிலும் எரிந்து சாம்பலாகியுள்ளது. அதிர்ஷ்டம் அள்ளி கொடுத்ததால் ஆசையாய் வாங்கிய வீடு தற்போது காட்டுத்தீயால் சேதம் அடைந்து இருக்கிறது. இதனை வைத்து, அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக நெட்டிசன் கள் பலர் பதிவிட்டு வருகிறார்கள். சில நெட்டிசன்கள் தற்போது அவருக்கு துரதிர்ஷ்டமான நேரம் என பதிவிட்டு வருகிறார்கள். உலகின் அதிர்ஷ்டக்காரரான நபரை தற்போது துரதிர்ஷ்டம் துரத்தியிருக்கிறது என்று நெட்டிசன்கள் கூறுவதையும் பார்க்க முடிகிறது.

எட்வின் காஸ்ட்ரோ வீட்டின் அருகிலேயே அமெரிக்காவின் பல பிரபலங்களின் வீடுகள் அமைந்துள்ளன. பாடகர் ஆரியனா கிரண்டே, நடிகர் டகோடா ஜான்சன் மற்றும் காமெடியன் ஜிம்மி கிம்மெல் உள்ளிட்டோரது வீடுகளும் உள்ளன. காட்டுத்தீயால் இதுவரை,13 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், லாஸ் ஏஞ்சல்சில் இருந்த பல நடிகர் - நடிகையர் வீடுகளும் தீயில் எரிந்துள்ளன. இதுவரை சுமார் 426 வீடுகள் காட்டுத்தீயால் சேதம் அடைந்துள்ளதாம்.

காட்டுத்தீயினால் பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலமை இன்னும் மோசமாகவே செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தண்ணீர் பற்றாக்குறையால் தற்போது தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் தீயை அணைக்க போதிய அளவு தண்ணீர் இல்லாததால் தீயணைப்பு வீரர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+