தங்கம் விலை அப்படியே சரியப்போகுதா? சீனாவால் நடக்கப்போகும் மாற்றம்! உண்மை என்ன?
பெய்ஜிங்: உலகின் மிகப்பெரிய தங்க வயல் ஒன்றை, சீனா கண்டுபிடித்திருக்கிறது. இந்த தங்கம் சர்வதேச சந்தைக்கு வந்தால், அவ்வளவுதான் உலகம் முழுவதும் தங்கம் விலை சட்டென குறையும் என்று பலரும் கூறி வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து நிபுணர்கள் விளக்கமளித்துள்ளனர்.
ரொம்பவும் ரேரான பொருட்களுக்குதான் டிமாண்ட் அதிகம். தேவை அதிகமாக இருப்பின் விலையும் உயரும். தங்கமும் அப்படித்தான். உலகம் முழுவதும் தங்கம் குறைவான அளவில் கிடைக்கிறது. அதை தோண்டி எடுத்து, ஆபரணமாக செய்வது என்பது மிகப்பெரிய வேலை. எனவேதான் தங்கம் இவ்வளவு விலையில் விற்கப்படுகிறது. ஆனால், எதிர்காலத்தில் தங்கம் விலை குறையும் என்று பேச்சுக்கள் அடிபடுகின்றன. இதற்கு சீனா மிக முக்கிய காரணமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

தங்க வயல்
அதாவது, சீனாவின் மத்திய ஹுனான் மாகாணத்தில் மாபெரும் தங்கப் புதையல் கண்டறியப்பட்டுள்ளது. இங்கு 1,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான தங்கம் இருக்கலாம் என தகவல்கள் கசிந்திருக்கின்றன. அப்படியெனில் இதுதான் உலகின் மிகப்பெரிய தங்க வயல். வழக்கமாக தங்க வயல்களில் வெட்டி எடுக்கப்படும் ஒரு டன் பாறையில் 8 கிராம் தங்கம் இருந்தாலே அது பெரிய விஷயமாக பார்க்கப்படும். இப்படி தங்கம் கிடைக்கும் பகுதிகள் உயர்தரமான சுரங்கமாக கருதப்படும். ஆனால், சீன தங்க வயலில், ஒரு டன் பாறையில் 138 கிராம் தங்கம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. எனவே சீனாவிடம் இருப்பது உயர்தர தங்கம்.
உயர்தர தங்கம்
இதன் மதிப்பு சுமார் ரூ.7 லட்சம் கோடி. அதாவது, கௌதம் அதானியின் சொத்து மதிப்புக்கு சமம். இந்த அளவு பணத்தை நீங்கள் வைத்திருக்கிறீர்கள் எனில், நீங்கள் உலக பணக்காரர்கள் பட்டியலில் 25வது இடத்தை பிடித்துவிட முடியும். அதெல்லாம் எதுக்கு? தங்கம் விலை குறையுமா? குறையாதா? என்று கேட்கிறீர்களா? நிபுணர்கள் இதுகுறித்து விளக்கமளித்துள்ளார்கள்.
தங்கமும் பிரச்சனையும்
அதாவது, இந்த தங்கத்தை சீனா வெட்டி எடுப்பதில் சிக்கல்கள் இருக்கின்றன. காரணம் இது மிகவும் ஆழமான பகுதியில் இருக்கிறது. 2-3 கி.மீ ஆழத்தில் இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்க சுரங்கம் சுமார் 4 கி.மீ ஆழம் கொண்டது. அப்படியெனில், சீனாவால் தங்கத்தை ஈஸியாக தோண்டி எடுக்க முடியுமே என்று கேள்வி எழலாம். ஆனால் அதை செய்வது ரொம்பவும் செலவு பிடித்த மற்றும் கஷ்டமான வேலை.
தங்கம் தங்கம்
இரண்டாவது சவால், காலம்தான். அதாவது இன்றைய தேதியில் தங்கத்தை வெட்டி எடுக்க திட்டம் வகுக்கப்பட்டு செயல்பாடுகள் தொடங்கப்பட்டாலும், குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும் தங்கத்தை வெட்டி எடுக்க. அதாவது 2035ல்தான் தங்கம் வெட்டி எடுக்கப்பட்டு கைகளுக்கு கிடைக்கும். அப்படியே வெட்டி எடுத்தாலும் ஆண்டுக்கு 15-30 டன் தங்கத்தை மட்டுமே நம்மால் வெட்டி எடுக்க முடியும். ஆனால் ஓர் ஆண்டுக்கு உலகம் முழுவதும் சுமார் 3600 டன் தங்கம் தேவை. மொத்த தேவையில் சீனா வெட்டி எடுக்கும் தங்கத்தின் அளவு வெறும் 1-3% தான்.
விலை குறையுமா?
இப்படி எடுக்கப்பட்ட தங்கத்தை சீனா, வெளியில் விற்பனை செய்யாது. அது தன்னுடைய மத்திய வங்கியில் சேமிப்பாக வைத்துக்கொள்ளும். அமெரிக்காவின் கரன்சியான டாலர் ஏன் இவ்வளவு வலியமையானதாக இருக்கிறது? ஏனெனில் அந்நாடு அதிக தங்கத்தை வைத்திருக்கிறது. சீனாவும் எதிர்காலத்தில் தங்கத்தின் இருப்பை அதிகரிக்கும்போது அந்நாட்டின் கரன்சி மதிப்பு சர்ரென மேலே உயரும்.
எனவே எப்படி பார்த்தாலும், தங்கம் விலை குறைய வாய்ப்பில்லை ராஜா! என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். எனவே தங்கத்தை முடிந்த அளவுக்கு சேமித்துக்கொள்ளுங்கள்.
-
Gold Price Today: தங்கம் விலை மளமளவென சரிந்தது.. 2வது நாளாக இன்றும் குறைந்தது.. நகை பிரியர்கள் குஷி! -
அலறும் சீனா - பாகிஸ்தான்.. இந்தியாவிடம் இனி வாலாட்ட முடியாது.. கைக்கு வந்த LRLACM ஏவுகணை.. வெற்றி -
தங்கம் விலை 3 நாளில் 300 டாலர் உயர்வு.. அய்யய்யோ..! ஷாக் கொடுத்த Gold Price.. இனி தினமும் அதிரடி தான்! -
தங்க நகை வாங்குவோருக்கு 'ரெட் கார்பெட்' வரவேற்பாம்.. குஷியில் வங்கிகள்.. ஏன் தெரியுமா? -
Gold Price Today: 3 நாள் உயர்வுக்கு பிரேக்.. இன்று குறைந்த தங்கம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு? -
Gold Price Today: தங்கம் விலை இன்றும் அதிரடி உயர்வு.. தொடர்ந்து 3 நாட்களாக அதிகரிப்பு! சென்னையில் ஒரு சவரன் என்ன ரேட்? -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?"












Click it and Unblock the Notifications