அடங்காத கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 6,310,808 பேர் பலி.. 531,522,920 பேருக்கு பாதிப்பு
கொரோனா தொற்று பாதிப்பில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 2வது இடத்தில் உள்ளது
ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன.
இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்டது.
இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,309,337 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 531,522,920 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 502,297,703 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 22,914,409 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருந்து
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 85,716,214 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,772 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,031,273 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 82,105,073 பேர் குணமடைந்து வீட்டுக்கு சென்றுள்ளனர்.

பாதிப்பு
நம் நாட்டை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,154,737 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 1,694 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 524,586 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,611,370 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தடுப்பூசி
தொற்றின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 7 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.,

முதலிடம்
தொற்று பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், நம் நாடும் 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 30,953,579 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 8,195 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 666,496 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 61 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 29,944,585 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications