தொடரும் சோகம்.. உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 553,982,352 பேர் பாதிப்பு.. 6,360,706 பேர் பரிதாப பலி

கொரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடம், இந்தியா 2வது, பிரேசில் 3வது இடத்திலும் உள்ளன

Subscribe to Oneindia Tamil

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன.

இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்டது.

இந்த வைரஸ் தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,360,706 பேரை தாக்கி கொன்றுள்ளது.. இன்றைய தினம், உலகம் முழுவதும் கொரோனாவால் 553,982,352 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 528,585,520 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 19,036,126 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் இன்னமும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 குணமடைந்தனர்

குணமடைந்தனர்

இந்த கொடூர வைரஸுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியாத நிலையில், தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.. அந்த வகையில், உலக நாடுகள் அனைத்துமே தடுப்பூசிகளை கையில் எடுத்துள்ளன.. அமெரிக்காவில் 89,522,328 பேர் கொரோனாவைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 15,245 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 1,043,308 பேர் இதுவரை அமெரிக்காவில் தொற்றால் மரணமடைந்துள்ளனர்.. நேற்று மட்டும் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.. இதுவரை 85,010,341பேர் குணமடைந்து சென்றுவிட்டனர்.

ஒருத்தர்கூட இல்லை

ஒருத்தர்கூட இல்லை

நம் நாட்டை பொறுத்தவரை, மத்திய அரசு எத்தனையோ தடுப்பு மற்றும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து கொண்டுதான் வருகிறது.. 43,500,504 பேர் இதுவரை கொரோனாவைரஸ் தொற்றுக்கு நம் நாட்டில் பாதிப்படைந்துள்ளனர்.. 11,985 பேர் நேற்று மட்டும் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.. இதுவரை 525,168 பேர் உயிரிழந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களாகவே தொற்றால் யாருமே உயிரிழக்கவில்லை.. இதுவரை 42,851,590 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இதில், தமிழ்நாடு நிலைமை கவலையை தர ஆரம்பித்துள்ளது.. கொரோனாவால் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 34,80,103க அதிகரித்து இருக்கிறது. சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 1,059 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தவர்களில் யாரும் இன்று உயிரிழக்கவில்லை. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38,026 ஆகவே தொடர்கிறது. சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 13,319 ஆக அதிகரித்து இருக்கிறது. 1,372 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

சோதனைகள்

சோதனைகள்

இந்த வைரஸின் தீவிரத்தின் தாக்கத்தையும், அதன் வீரியம் மற்றும் பாதிப்பையும் குறைக்க தடுப்பூசி பாதுகாப்பாக கருதப்படுகிறது.. அந்த வகையில், இந்தியாவில் ஏற்கெனவே பல கோடிக்கணக்கான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது... தற்போதும் அந்த பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. எனினும், கடந்த 8 மாத காலமாகவே, 15-18 வயதிற்குட்பட்டவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டன.. அதேபோல் சோதனைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.,

இறப்பு

இறப்பு

கொரோனாவைரஸ் தொற்று துவங்கியது முதலே, இப்போது வரை தொற்று பாதிப்பில் உலகில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ள நிலையில், இந்தியா 2 இடத்திலேயே பாதிப்பில் நீடித்து வருகிறது.. 3வதாக, பிரேசில் நாடு பாதிப்படைந்த நாடுகளாக இப்போதும் வருகின்றன.. இந்த நாட்டில் 32,476,920 பேர் இதுவரை அங்கு வைரஸுக்கு பாதிப்படைந்துள்ளனர்.. 42,720 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.. இதுவரை 671,938 பேர் அந்த நாட்டில் உயிரிழந்துள்ளனர்.. 174 பேர் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர்.. 30,880,584 பேர் இதுவரை குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகி சென்றுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+