உலகம் முழுவதும் கொரோனாவால் 24 லட்சம் பேர் பாதிப்பு.. 1.65 லட்சம் பேர் பலி.. அமெரிக்கா முதலிடம்
ஜெனிவா: உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,407,282 ஆக உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது,
Recommended Video
கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் வூகானில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை மோசமாக பாதித்துள்ளது. இதுவரை கொரோனாவால் உலகம் முழுவதும் 2,407,282 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த உயிர்கொல்லி கொரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் இறந்தவர்களின் எண்ணிக்கை 165,049 ஆக உயர்ந்துள்ளது,

கொரோனாவில் இருந்து உலகம் முழுவதும் இதுவரை குணமானவர்களின் எண்ணிக்கை 624,948 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 4957 பேர் கொரோனாவுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் ஒரே நாளில் 1534 பேர் இறந்துள்ளனர். ஸ்பெயினில் 410 பேரும், இத்தாலியில் 433 பேரும், இங்கிலாந்தில் 596 பேரும் ஒரே நாளில் கொரோனாவுக்கு இறந்துள்ளனர். பிரான்சில் 395 பேரும், ஜெர்மனியில் 104 பேரும், துருக்கியில் 127 பேரும் உயிரிழந்துள்ளனர்.
பெல்ஜியம் நாட்டில் 230 பேரும், கனடாவில் 117 பேரும், பிரேசிலில் 101பேரும், ஈரானில் 87 பேரும், நெதர்லாந்தில் 83 பேரும் ஒரு நாளில் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
உலகிலேயே கொரோனாவால் அமெரிக்கா மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 764303 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று ஒரு நாளில் மட்டும் 25511 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 40548 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications