குப்புறப் படுக்கப் போட்டு யானை மிதிச்சா எப்படி இருக்கும்...??

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாங்காக்: தாய்லாந்து மசாஜ் தெரியும்.. ஆனால் இந்த யானை மசாஜ் கொஞ்சம் திரில்லா இருக்கு. ஈரக்குலை நடுங்கிப் போகிறது பார்க்கவே.. ஆனால் இந்த யானை மசாஜுக்கும் அங்கு நிறைய டிமாண்டாம்.

கீழே படுக்கப் போட்டு யானையை காலால் மிதிக்க விடுகிறார்கள். அதுவும் ஒத்தடம் கொடுப்பது போல காலை வச்சு வச்சு எடுக்குது. நல்ல வேளை பெரிய யானையை விடலை. குட்டி யானைதான் மசாஜ் செய்யுது.

Wow, what a massage!

தாய்லாந்தின் கோ சமுய் தீவில்தான் இந்த குட்டி யானை மசாஜ் பிரபலம். வழக்கமான தாய் மசாஜ் போலவே இதுவும் அங்கு பிரபலமாகியுள்ளது.

முதுகு முழுவதும் நன்றாக மசாஜ் செய்து ஒத்தி எடுக்கிறது தனது "பிஞ்சுக் காலால்". இதைப் பார்க்கும்போது நம்முடைய அப்பாக்கள் முதுகில் நாம் காலால் மிதித்து மசாஜ் செய்த ஞாபகம் வருவதைத் தடுக்க முடியவில்லை.

அட, இந்த யானைக் குட்டிங்களுக்கு நம்மைப் பிடித்து விட்டால் துதிக்கையால் முத்தம் வேறு கொடுக்குமாம்...!

நல்லாத்தாய்யா இருக்கு.. மசாஜு!

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In Thailand's Koh Samui islands, the baby elephant massage is very famous. This baby elephant will relax you like other traditional Thai oil massage.
Please Wait while comments are loading...