66 பேருடன் கடலில் விழுந்த எகிப்து விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு, ஆனால்...
கெய்ரோ: 66 பேருடன் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிய எகிப்துஏர் விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடத்தை கண்டுபிடித்துள்ளதாக எகிப்து அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 18ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இருந்து 66 பேருடன் எகிப்து தலைநகர் கெய்ரோவுக்கு புறப்பட்ட எகிப்துஏர் விமானம் ராடாரில் இருந்து மாயமானது. பின்னர் விமானம் மத்திய தரைக்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாக அறிவிக்கப்பட்டது.

விமானம் கடலில் விழும் முன்பு வெடித்துச் சிதறியதாகவும் கூறப்பட்டது. இது தீவிரவாதிகளின் நாசவேலையாக இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தபோதிலும் இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்த ஒரு தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
மத்திய தரைக்கடலில் உள்ள கிரேக்க தீவான கார்பதோஸ் அருகே விமானத்தை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த தேடல் பணியில் எகிப்து, கிரீஸ், பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் விமானங்கள், கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில் விமானத்தின் பாகங்கள் கிடக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக எகிப்து அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது. விமானத்தின் கருப்பு பெட்டி இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருப்பு பெட்டியில் இருந்து வரும் சிக்னல் இன்னும் 5 நாட்களில் நின்றுவிடும் என கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவிக்கப்பட்டது. சிக்னல் இல்லாமல் கருப்பு பெட்டியை கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications