நேபாளம்: சீனா அருகே காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு
காத்மாண்டு: நேபாள நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மீட்புப் பணிக்காக வந்த இடத்தில் காணாமல் போன அமெரிக்க ஹெலிகாப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது ராணுவ ஹெலிகாப்டராகும். நேபாளத்தில், சீன எல்லைக்கு அருகே உதவிப் பொருட்களைக் கொடுக்கச் சென்றபோது இந்த ஹெலிகாப்டர் காணாமல் போனது. அந்த ஹெலிகாப்டரில் அமெரிக்க 6 கடற்படை வீரர்களும், 2 நேபாள வீரர்களும் இருந்தனர். அதில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

இந்த ஹெலிகாப்டரின் உடைந்த பாகங்கள், காத்மாண்டுவிலிருந்து 56 கிலோமீட்டர் தொலைவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கலின்சாக் என்ற மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்துள்ளது. இது கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 11,100 அடி உயரமானதாகும். தற்போது ஹெலிகாப்டரின் பாகங்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதற்கான காரணம் தெரியவில்லை. ஆனால் எரிபொருள் தீர்ந்து அதனால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக அ்போது அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த இந்திய ஹெலிகாப்டரின் ரேடியோவில் இதுதொடர்பான அமெரிக்க விமானிகளின் உரையாடல் பதிவானதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications