AI-க்கு வேலி.. டிரம்ப், ஜி ஜின்பிங் சந்திப்பில் சாத்தியமாகுமா? குட்டையை குழப்பும் என்விடியா பிரச்சனை
பெய்ஜிங்: நவ.18-19ம் தேதிகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேரில் சந்திக்க இருக்கின்றனர். இந்த சந்திப்பின்போது, AI பாதுகாப்பு குறித்து பேசப்பட உள்ளது. ஆனால், என்விடியா பிரச்சனையை சீனாவுடன் அமெரிக்கா தொடர்புப்படுத்தியிருப்பதால், இந்த பேச்சுவார்த்தை எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என்று தெரியாது.
பேச்சுவார்த்தையின் நோக்கம், இரு நாடுகளுக்கும் இடையில் Hotline உருவாக்குவதுதான். அதாவது ஒரு காலத்தில் அமெரிக்க அரசுக்கும், ரஷ்ய அரசுக்கும் இடையே நேரடி தொலைப்பேசி சேவை இருந்தது. காரணம், இரண்டு நாடுகளும் எதிரிகளாக இருந்தாலும்.. தவறான புரிதல் காரணமாக அணு ஆயுதங்களை பயன்படுத்தும் சூழல் உருவாகிவிடக்கூடாது என்பதுதான். எனவே சில சலசலப்புகள் உருவாகும்போது.. Hotline மூலம் பேசி, இது போருக்கான நோக்கம் இல்லை என்று இரு நாடுகளும் பிரச்சனையை தீர்த்துக்கொள்ளும்.

அதேபோன்ற சூழலில் தற்போது அமெரிக்காவும்-சீனாவும் இருக்கின்றன. AI காரணமாகத்தான் தற்போது போர் உருவாகும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆமாங்க.. OpenAI ஏஜென்ட் ஆஸ்திரேலியா நாட்டின் ரகசியங்களை திருடியிருந்தது. இப்படி செய்ய சொல்லி யாரும் உத்தரவு கொடுக்கவில்லை. ஆனால், தன்னிச்சையாக செய்திருக்கிறது. ஆஸ்திரேலியா என்பதால் ஒகே.. இதுவே சீனாவின் ரகசியங்களில் கை வைத்திருந்தால்.. இந்நேரம் நடந்திருப்பதே வேறு.
அதேபோல DeepSeek AI ஏஜென்டும் தேவையில்லாத வேலையை பார்த்திருக்கிறது. இதை Shut down செய்ய உத்தரவு போட்டபோது.. தொடர்ந்து செயல்படுவதற்காக, தன்னை நிறுத்தும் கமாண்டை ஆஃப் செய்திருக்கிறது.
மொத்தத்தில் AI நம் கையை மீறி சென்றுக்கொண்டிருக்கிறது. இது எங்குபோய் வெடிக்கும் என தெரியாது. ஒருவேளை எதிர்பாரத விதமாக அமெரிக்க ராணுவ தகவல்களையோ, சீன ரகசியங்களையோ திருவிட்டது எனில்.. இரு நாடுகளுக்கு இடையில் போர் ஏற்படும் சூழல் ஏற்படும். இது இந்தியா உட்பட மொத்த உலகத்தையும் பாதிக்கும். எனவே AI கையை மீறி போகும் போது நிலைமையை சமாளிக்க.. உடனடியாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதற்காக Hotline உருவாக்க வேண்டும் என்று இரு நாடுகளும் யோசித்திருக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் இதற்காக இரு நாடுகளுக்கும் இடையில் இது குறித்து புரிதல் ஏற்பட்டிருந்தது. இப்போது நவ.18-19ம் தேதிகளில் நடக்கும் APEC மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும், Hotline-ஐ நடைமுறைப்படுத்த ஒப்புக்கொள்ள வேண்டும்.
ஆனால், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்விடியாதான் அந்த சிக்கல். என்விடியா முன்னாள் சிஇஓ ஜென்சன் ஹுவாங், சீன பெண்ணுடன் தொடர்பில் இருந்தார். இவருடன் தொடர்பில் இருந்த பெண்ணை சீன உளவாளி என்று அமெரிக்கா கூறியிருந்ததை சீனா கொஞ்சம் கூட ரசிக்கவில்லை. எனவே, இந்த கோபம், இரு நாட்டு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் எதிரொலிக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications
