சீனாவின் பலே பிளான்! வடகொரியாவில் இறங்கிய ஜி ஜின்பிங்.. மொத்த உலகமும் திரும்பி பார்த்த தருனம்!

Subscribe to Oneindia Tamil

பியாங்யாங்: சமீபத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் ஆகியோர் சீனாவுக்கு சென்றிருந்தனர். இப்படி இருக்கையில் சீன அதிபர், கிம் ஜான் உன்-ஐ பார்க்க வடகொரியாவுக்கு சென்றிருக்கிறார். இது சர்வதேச அளவில் கவனம் பெற்றிருக்கிறது.

சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்னைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை மேலும் ஆழப்படுத்தப்போவதாக ஜி ஜின்பிங் கூறியிருக்கிறார்.

Xi Jinping

முன்னதாக கடந்த 2019-ஆம் ஆண்டு, சீன அதிபர் ஜி ஜின்பிங் வடகொரியாவுக்கு சென்றிருந்தார். அதன் பின்னர் இப்போதுதான் செல்கிறார். அவருக்கு பியோங்யாங் நகரில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த சந்திப்பில், பிராந்திய அமைதியை உறுதி செய்ய இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டியதன் அவசியத்தை ஜி ஜின்பிங் வலியுறுத்தினார். இரு நாடுகளுக்கும் இடையிலான முறிக்க முடியாத நட்புறவை அவர் சுட்டிக்காட்டினார்.

வடகொரியா தனது அணு ஆயுதத் திறனைத் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையிலும், அது குறித்த நேரடி விவாதங்களை சீன அதிபர் தவிர்த்துள்ளார். இது சர்வதேச அரசியல் நோக்கர்களிடையே கவனத்தைப் பெற்றுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோரைச் சந்தித்த பிறகு ஜி ஜின்பிங் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். ரஷ்யாவுடன் வடகொரியா நெருங்கி வரும் வேளையில், அந்நாட்டின் மீதான தனது செல்வாக்கை நிலைநிறுத்த சீனா முயற்சிப்பதாகக் கருதப்படுகிறது. வட கொரியா தற்போது ஆயுத உற்பத்தியில் டாப்பில் இருக்கிறது. எனவே, அந்நாட்டை கைக்குள் போட்டுக்கொள்வது மூலம், சர்வதேச அளவில் தனது ஆதிக்கத்தை விரிவுப்படுத்த சீனா பிளான் செய்து வருகிறது. இதை எக்சிகியூட் செய்யவே சீன அதிபர் வடகொரியாவுக்கு போயிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்தச் சந்திப்பு, ஆசியப் பிராந்தியத்தில் மாறிவரும் அரசியல் கூட்டணிகளுக்கு மத்தியில், சீனா மற்றும் வடகொரியா இடையிலான பாரம்பரிய நட்புறவை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+