டிரம்ப், புதின் சந்திப்பில் என்ன பேசப்படும்? வேறு லைனில் போகும் சீன அதிபர்! விஷயம் கொஞ்சம் சீரியஸ்!
பெய்ஜிங்: நவ.19ம் தேதி சீனாவின் ஷென்சென் நகரில் அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பின், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின்போது என்ன பேசப்படும் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதாவது அணு ஆயுதங்கள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அமெரிக்காவும், ரஷ்யாவும் அணு ஆயுதங்களை அதிக அளவில் வைத்திருக்கின்றன. இவர்கள் மத்தியில் அணு ஆயுதம் குறித்து பேச்சு வந்தால்.. மாறி மாறி குறைதான் சொல்லிக்கொள்வார்களே! தவிர.. உருப்படியாய் எதுவும் பேசமாட்டார்கள். இதை புரிந்துக்கொண்ட சீனா.. அணு ஆயுதம் குறித்து பேச ரெடியாக இல்லை என்று கூறி வருகிறதாம்.

3 நாட்டு தலைவர்களும் சந்தித்துக்கொள்வது இதுதான் உலக வரலாற்றில் முதல் முறை என்பதால்.. சந்திப்பின்போது என்ன பேசப்படும் என்பது குறித்து எதிர்பார்ப்பு தீவிரமடைந்திருக்கிறது.
இந்த சந்திப்பின்போது, உலக அமைதி மற்றும் மூன்று நாடுகளுக்கு இடையிலான சீரான உறவுகள் குறித்து விவாதிக்கப்படும் என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் தெரிவித்திருக்கிறார். உலக நாடுகளின் எதிர்பார்ப்பை இது சந்திப்பு நிறைவேற்றும் என்றாலும்.. சந்திப்பின்போது இந்த விஷயம் தான் பேசப்படும் என்று என்பது குறித்த எந்த உறுதியான தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.
இருப்பினும், அணு ஆயுதம் தொடர்பான பாசிட்டிவான பேச்சுகளுக்கு நான் முழுமையான வரவேற்பு தெரிவிப்பேன் என்று, ஐநா பொதுச் செயலாளர் கூறியிருக்கிறார் என்பது கவனிக்கத்தக்கது.
அமெரிக்காவுக்கும், ரஷ்யாவுக்கும் கூட ஓரளவுக்கு ஒற்றுமை எட்டியிருக்கின்றன. ஆனால், சீனா விஷயத்தில் அப்படி கிடையாது. அமெரிக்காவை பொறுத்தவரை சீனா AI துறையில் நம்மை முந்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. எனவே AI நிறுவனங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறது. ஆனால், சீனா AI மேட்டரை வேறுமாதிரியாக அணுகுகிறது. AI கட்டுக்குள்தான் இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. எனவே AI விஷயத்தில் ஒற்றுமையாக போவோம் என்று கூறுகிறது. அமெரிக்கா இதை ஏற்கிறதா? மறுக்கிறதா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த மீட்டிங்கில் AI தான் ஹாட் டாப்பிக்காக இருக்கும். இது வெறும் பேச்சுகளாக நின்றுவிடுமா? அல்லது அதைத்தாண்டி செயல்பாட்டுக்கு வருமா? என்பது மீட்டிங் முடிந்த பின்னர்தான் தெரிய வரும்.


Click it and Unblock the Notifications
