For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாயை அகலமாக திறந்து கொட்டாவி விட்ட சீனர்... நுரையீரல் காலி!

Google Oneindia Tamil News

பெய்ஜிங்: வாயை ரொம்ப அகலமாகத் திறந்து கொட்டாவி விட்டதால் ஒரு சீன நாட்டவரின் நுரையீரலில் பெரிய ஓட்டை விழுந்து அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அந்த நபருக்கு வயது 26தான். பெயர் ஊ. சீனாவின் ஹூபாய் மாகாணத்தின், ஊஹான் என்ற ஊரைச் சேர்ந்தவர். சம்பவத்தன்று காலை வழக்கம் போல கண் விழித்து எழுந்த ஊ, வாயைப் பெரிதாக திறந்தபடி பெரிய்ய கொட்டாவி விட்டுள்ளதால். இதனால் அவரது நுரையீரல் அசாதாரண அளவுக்கு விரிந்து அதில் ஓட்டை ஏற்பட்டு விட்டது. இதையடுத்து அவருக்கு நெஞ்சு வலித்துள்ளது. ஆனால் அதை அவர் கண்டு கொள்ளவில்லை.

ஆனால் போகப் போக வலி அதிகரித்துள்ளது. மூச்சு விடவும் முடியவில்லை. இதையடுத்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு ஓடினார். அங்கு அவரைப் பரிசோதித்துப் பார்த்த டாக்டர்கள், நுரையீரலில் பெரிய ஓட்டை விழுந்திருப்பதைக் கண்டுபிடித்தனர். அதற்குப் பெயர் நூமோதோராக்ஸ் என்று பெயர். அதாவது நுரையீரலில் உள்ள காற்றுப் பை பெரிதாகி வெடித்து ஓட்டை விழுந்துள்ளது. இதனால் நுரையீரலைச் சுற்றிலும் காற்று தேங்கி அவருக்கு வலியைக் கொடுத்துள்ளது.

English summary
A 26-year-old man in China suffered an unusual injury - he yawned so hard that his lung collapsed. Ou, from Wuhan in China's Hubei Province, likely ripped a hole in his lung when he stretched and yawned in the morning, doctors said. Ou felt a sudden pain in his chest but ignored it. However, he had to go to the Central Hospital of Wuhan when the pain intensified and he couldn't breathe, 'Global Times' reported.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X