பிளாஷ் பேக் 2023.. மீண்டும் திரும்பிய ரத்த வரலாறு! இஸ்ரேல் ஹமாஸ் போரை கண்டு உலக நாடுகள் மிரள்வது ஏன்
டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்தாண்டு தொடங்கிய போர் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில், இது வரலாற்றில் மிக மோசமான இடத்தை பிடித்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே 100 ஆண்டுகளாகப் பிரச்சினை இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக இரு தரப்பிற்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்ட போதிலும், சண்டை பெரியளவில் கையை மீறிச் செல்லவில்லை.

ஆனால், கடந்த அக். மாதம் நடந்த தாக்குதல் அப்படியில்லை. இரு தரப்பிற்கும் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், அது போராக மாறியது. உக்ரைன் போருக்குப் பிறகு உலகம் சந்திக்கும் இரண்டாவது போர் இதுவாகும்.
வரலாறு: கடந்த 1914க்கு முன் வரை ஓட்டோமான் பேரரசு தான் பாலத்தீன பகுதியை ஆண்டு வந்தது. அப்போது பாலத்தீனத்தில் அரேபியர்கள் தான் பெரும்பான்மையாக இருந்தார்கள்.. யூதர்கள் சிறுபான்மையினராகவே இருந்தார்கள். இருப்பினும், முதலாம் உலகப்போரில் ஒட்டோமான் பேரரசு தோற்ற நிலையில், பாலஸ்தீனம் பிரிட்டன் ஆட்சிக்குக் கீழ் வந்தது. அப்போதும் பெரியளவில் பிரச்சினை இல்லை.
இருப்பினும் 1920 முதல் 1940 காலகட்டத்தில் பாலஸ்தீன பகுதியில் யூதர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. குறிப்பாக ஹிட்லர் காலத்தில் அவருக்கு நடந்த கொடுமைகள் தான் அதிகப்படியான மக்கள் இங்கே வரக் காரணமாக இருந்தது. இதனால் பாலஸ்தீனத்தில் யூதர்கள் அதிகரித்து, பாலஸ்தீன அரபிகள் எண்ணிக்கை குறையவே அங்கே இரு தரப்பிற்கும் இடையே மோதல் அதிகரித்தது.
என்ன பிரச்சினை: இந்தியாவைப் போலவே 1947இல் பாலத்தீனத்தில் இருந்தும் பிரிட்டன் வெளியேற முடிவு செய்தது. அப்போது பாலஸ்தீனத்தை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு ஒரு நாடு, பாலத்தீன அரபிகளுக்கு ஒரு நாடு என இரு நாடுகளைத் தோற்றுவிக்கலாம் என்றும் ஜெருசலேமை சர்வதேச நகரமாக மாற்றலாம் என்றும் ஐநா கூறியது. ஜெருசலேம் என்பது கிறிஸ்துவர்கள், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என மூன்று மதத்தை சேர்ந்தவர்களுக்கும் முக்கிய நகரமாகும்.
இந்தத் திட்டத்தை அப்போதைய யூத தலைவர்கள் ஏற்றுக் கொண்டாலும், பாலத்தீன அரபிகள் நிராகரித்தனர். 1948இல் பிரச்சினையைத் தீர்க்க முடியாது என்பதை உணர்ந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் நாட்டை விட்டு வெளியேறினர். தொடர்ந்து 1948இல் யூத தலைவர்கள் இணைந்து இஸ்ரேல் என்று தனியாக ஒரு நாடு தோற்றுவிக்கப்பட்டதாக அறிவித்தனர். அப்போது அமெரிக்க அதிபர் ஹேரி ட்ரூமேனும் அன்றைய தினமே இஸ்ரேலைத் தனி நாடாக அங்கீகரித்தார்.
காசா: அப்போது முதலே இரு தரப்பிற்கும் இடையே போர் மூண்டது. 1949 வரை இந்தப் போர் நீண்ட நிலையில், பல லட்சம் பாலத்தீன அரபிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறினர். போர் முடிவுக்கு வரும் போது பெரும்பாலான பகுதிகள் இஸ்ரேல் கட்டுப்பாட்டில் வந்தது. மேற்கு கரை எனப்படும் வெஸ்ட் பேங்க் பகுதி ஜோர்டான் பக்கமும், காசா பகுதி எகிப்து கட்டுப்பாட்டில் சென்றது. அதன் பிறகு அமைதி ஏற்படப் பல முயற்சி எடுக்கப்பட்ட போதிலும், அமைதி ஏற்படவே இல்லை.
இது தொடர்பாக இரு தரப்பிற்கும் இடையே கடந்த பல காலமாக மோதல் இருந்தே வந்தது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் அங்கே நிலைமை மேம்பட்டு இருந்தது. பெரியளவில் போர் எதுவும் ஏற்படாமலேயே இருந்தது. ஆனால், கடந்த அக். மாதம் இந்த நிலைமை முற்றிலுமாக மாறியது. அன்று இஸ்ரேல் மீது முதலில் சரமாரி ஏவுகணை தாக்குதலை நடத்திய காசாவின் ஹமாஸ் படை அதன் பிறகு உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியது.
போர்: கண்ணில் பட்டவர்களை எல்லாம் ஹமாஸ் சுட்டுத் தள்ளியது. இஸ்ரேல் காசா எல்லையில் ஒரு நகரில் இசைக் கச்சேரி நடந்த நிலையில், உள்ளே புகுந்து சரமாரியாகச் சுட்டுத்தள்ளியது. மேலும், பலரைப் பிணைக் கைதிகளாகவும் பிடித்துச் சென்றது. அப்போது முதலே இந்தப் போர் தொடர்ந்து நடந்து வருகிறது. முதலில் இதில் இஸ்ரேல் சற்று தடுமாறினாலும், அதன் பிறகு தீவிரமாகத் தாக்குதலை ஆரம்பித்தது.
பதிலடியாகக் காசா பகுதியில் ஏவுகணை தாக்குதலை நடத்திய இஸ்ரேல், அதன் பிறகு காசாவில் இறங்கி சரமாரியாகச் சுட்டுத் தள்ளியது. உலக நாடுகள் தொடர்ந்து வலியுறுத்திய நிலையில், இடையில் சுமார் ஒரு வாரம் மட்டுமே போர் நிறுத்தம் வந்தது. இருப்பினும், அதன் பிறகு மீண்டும் போர் ஆரம்பித்துவிட்டது. இரு தரப்பும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தாண்டில் நடந்த மிக மோசமான ஒரு போரான இது இன்னும் தொடரவே செய்கிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications