அல்கொய்தா மீது 'தங்க வாள்' தாக்குதலை ஆரம்பித்துள்ள ஏமன்
சனா: அல்கொய்தா தீவிரவாதிகள் பதுங்கியுள்ள பகுதிகளில் ஏமன் நாட்டு ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
வளைகுடா நாடான ஏமனின் தெற்கு பிராந்தியத்தில் அல்கொய்தா தீவிரவாத அமைப்பினர் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து ஏமன் நாட்டு ராணுவம் அப்பகுதியில் தாக்குதலை தொடங்கியுள்ளது.
இந்த தாக்குதலில் பீரங்கிகள், ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும், மஃபாட் மண்டலத்தின் மலைப்பகுதிகளில் அல்கொய்தா பதுங்கியுள்ள பகுதிகளில் இத்தாக்குதல் நடத்தப்படுவதாகவும் ராணுவ அதிகாரி ஒருவர் உள்நாட்டு செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மஃபாட் பகுதியை நோக்கி தளவாடங்களுடன் ராணுவ வீரர்கள் வாகனங்களில் விரைந்ததை பார்த்ததாக உள்ளூர் மக்கள் உறுதி செய்தனர். ராணுவம் நடத்தி வரும் இத்தாக்குதலுக்கு 'ஆபரேசன் கோல்டன் ஸ்வார்ட்ஸ்' அதாவது 'தங்க வாள்கள் நடவடிக்கை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ள வளைகுடா நாடுகளில் செயல்படும் அல்கொய்தா அமைப்பினர் அவ்வப்போது, ராணுவத்தினர் மீதும், வெளிநாட்டு அமைப்புகள் மீதும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
2009ம் ஆண்டு முதல் இந்த பிராந்தியத்தில் பெருகியுள்ள அல்கொய்தாவின் ஆதிக்கம் ஏமன் நாட்டுக்கு மட்டுமல்லாமல், எண்ணை வளம் மிக்க அண்டை நாடான சவுதி அரேபியாவுக்கும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications