Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிமிஷா பிரியாவை மன்னிக்கவே முடியாது! அவரை தூக்கில் போட்டே தீரணும்.. கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் பகீர்

Subscribe to Oneindia Tamil

சனா: கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா கொலை வழக்கில் ஏமன் சிறையில் இருக்கிறார். அவரது மரண தண்டனை இப்போது தற்காலிகமாகத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரத்தப் பணம் கொடுத்து அவரை பாதுகாப்பாக அழைத்து வரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் நிமிஷா பிரியாவின் குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்று கொல்லப்பட்ட மஹ்தி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹ்தி கூறியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது

கடந்த 2017ம் ஆண்டு ஏமன் நாட்டை சேர்ந்த மஹ்தி என்பவரைக் கொலை செய்த குற்றத்திற்காகக் கேரள நர்ஸ் நிமிஷா பிரியா அந்நாட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு இன்றைய தினம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதாக இருந்தது. இருப்பினும், காந்தபுரம் ஏபி அபூபக்கர் முஸ்லியார் உட்படப் பல்வேறு தரப்பினரும் எடுத்த முயற்சியால் மரண தண்டனை நிறுத்திவைக்கப்பட்டது.

Yemeni Victim s Brother Rejects Pardon for Kerala Nurse Nimisha Priya Demands Execution

மன்னிக்க முடியாது

அதேநேரம் மரண தண்டனை இப்போது தற்காலிகமாக மட்டுமே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ரத்தப் பணம் கொடுத்து நிமிஷா பிரியாவை பத்திரமாக மீட்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காகப் பாதிக்கப்பட்ட மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்ட மஹ்தி சகோதரர் அப்தெல்ஃபத்தா மஹ்தி கூறியுள்ள சில கருத்துகளைத் தேவாலயத்தயை கிளப்பியுள்ளது.

தூக்கில் போட வேண்டும்

அதாவது நிமிஷா பிரியா செய்தது குற்றம் என்றும் அவரது குற்றத்திற்கு மன்னிப்பே கிடையாது என்றும் திட்டவட்டமாகக் கூறியிருக்கிறார். நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், ஊடகங்கள் இந்த விஷயத்தில் குற்றவாளியை ஒரு பாதிக்கப்பட்டவர் போலச் சித்தரிப்பதாகவும் அப்தெல்ஃபத்தா கூறினார்..

நிமிஷா பிரியாவுக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், பலதரப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் உள்ள காந்தபுரம் ஏ.பி.அபூபக்கர் முஸ்லியார் உள்ளிட்டோர் தலையிட்டுப் பேசியதாலேயே மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இன்று அபூபக்கர் முஸ்லியாரை கேரள மாநில சிபிஐ-எம் செயலாளர் எம்.வி.கோவிந்தன் சந்தித்தார்.

பேச்சுவார்த்தை தொடர்கிறது

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் முஸ்லியார் என்னிடம் கூறினார். ஏமனில் உள்ள அதிகாரிகள் மற்றும் மன்னிப்பு வழங்க வேண்டிய குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக அவர் கூறினார்" என்று கோவிந்தன் தெரிவித்தார்.

குடும்பத்தினருக்கு ரத்தப் பணம் வழங்கி மன்னிப்பு கோருவதே அடுத்தகட்ட நடவடிக்கையாக இருக்கிறது. பல இஸ்லாமிய நாடுகளில் ரத்தப் பணம் என்ற ஒரு விஷயம் இருக்கும். அதாவது கொலை உள்ளிட்ட கொடூரக் குற்றம் செய்தவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இழப்பீடு தொகையைக் கொடுத்து மன்னிப்பு கோருவதே ரத்தப் பணம். அதேநேரம் ரத்தப் பணம் கொடுக்க முன்வந்தாலே மன்னிக்க வேண்டும் என அவசியம் இல்லை. அது குடும்பத்தினரின் தனிப்பட்ட முடிவாகும். இப்போது வரை ரூ.11 கோடி வரை ரத்தப் பணம் கொடுக்க முன்வந்துள்ளனர்.

வழக்கின் பின்னணி

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா, 2008ல் ஏமன் சென்று அங்குள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக வேலைக்குச் சேர்ந்தார். அங்கு உள்நாட்டுப் போர் ஏற்பட்டதால் பொருளாதார நெருக்கடி அதிகமானது. இதையடுத்து அவர் சொந்தமாக ஒரு கிளினிக் தொடங்க முடிவு செய்தார். இருப்பினும், ஏமன் சட்டப்படி அந்நாட்டுக் குடிமகன் மட்டுமே பிஸ்னஸ் செய்ய முடியும். இதனால் அங்குள்ள மஹ்தி என்பவருடன் சேர்ந்து கிளினிக்கை ஆரம்பித்தார். இருப்பினும், கொஞ்ச நாட்களிலேயே நிமிஷாவை மிரட்டிய மஹ்தி, கிளினிக் வருமானம் முழுவதையும் எடுத்துக் கொண்டார்.

எதிர்பாராத சம்பவம்

மேலும், நிமிஷா போட்டோவை மார்பிங் செய்து இருவருக்கும் திருமணம் நடந்தது போல மாற்றிக் கொண்டார். இதனால் யார் கேட்டாலும் திருமணம் நடந்துவிட்டதால் வருமானம் தனக்கே சொந்தம் என்றும் மஹ்தி கூறியிருக்கிறார். மேலும், நிமிஷாவின் பாஸ்போர்ட்டையும் மஹ்தி பிடுங்கி வைத்துக் கொண்டார். போலீசில் புகார் சொல்லியும் பிரச்சினை சரியாகவில்லை அப்போது ஒரு ஜெயில் வார்டன் அளித்த மஹ்திக்கு மயக்க மருந்து கொடுத்து பாஸ்போர்ட்டை எடுத்துக் கொள்ள ஐடியா கொடுத்துள்ளார். அவரது பேச்சைக் கேட்டு மயக்க மருந்து கொடுத்த போதே டோஸ் அதிகமாகி மஹ்தி உயிரிழந்ததாக உயிரிழந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+