‛எனக்கான பிரச்சனையே நீங்கள் தான்’.. ஜோக்கடித்த ஜோபைடன்! பிரதமர் மோடி ரியாக்சன் இதுதான்! சிரிப்பலை
டோக்கியோ: ஜப்பானில் நடக்கும் ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி பங்கேற்றார். இந்நிலையில், ‛‛எனக்கான பிரச்சனையை நீங்கள் தான்'' என பிரதமர் மோடியை பார்த்து அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஜோக்கடித்த சம்பவம் அனைவருக்கும் சிரிப்பலையை ஏற்படுத்தியது.
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் பிராந்தியம் அடிப்படையில் பல்வேறு கூட்டமைப்புகளை கொண்டுள்ளன. இதில் ஒன்று தான் ஜி7 கூட்டமைப்பு. கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்டவை இந்த கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

பொருளாதாரத்தில் முன்னேறி இருக்கும் இந்த நாடுகள் சுதந்திரம், மனித உரிமை, ஜனநாயக கட்டமைப்பு, நிலையான வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து விவாதித்து வருகின்றன. இந்நிலையில் தான் ஜி7 நாடுகளின் உச்சிமாநாடு ஜப்பானின் ஹிரோசிமா நகரில் நடைபெற்று வருகிறது.
இந்த மாநாட்டை ஜப்பான் ஏற்று நடத்தும் நிலையில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும்படி பிரதமர் மோடிக்கு ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அழைப்பு விடுத்தார். இதையடுத்து 3 நாள் பயணமாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி ஜப்பான் சென்றார். இதையடுத்து முதலாவதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுடன் பிரதமர் மோடி இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தார். அதன்பிறகு ஹிரோசிமாவில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
இதையடுத்து நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் அவர் பங்கேற்றார். அதன்பிறகு கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடக்க வேண்டிய குவாட் மாநாடு ஜப்பானில் நடந்தது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா அங்கம் வகிக்கின்றன. இந்த நாட்டு தலைவர்கள் ஜப்பானின் ஜி7 மாநாட்டில் பங்கேற்ற நிலையில் அங்கேயே குவாட் மாநாடும் நடந்தது. இந்த மாநாட்டின் ஒருபகுதியாக பிரதமர் மோடி-அமெரிக்க அதிபர் ஜோபைடன் ஆகியோர் இருநாடுகளின் உறவு பற்றி விவாதித்தனர்.

இந்த வேளையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பிரதமர் மோடியை பார்த்து ஜோக்கடித்தார். அதாவது அடுத்த மாதம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த சுற்றுப்பயணத்தை குறிப்பிட்டு பிரதமர் மோடியை பெருமையாக பேசி வந்த ஜோபைடன் திடீரென ஜோக்கடித்தார். பிரதமர் மோடி குறித்து ஜோபைடன் கூறியதாவது:
ஜனநாயகம் என்பது முக்கியம் என நீங்கள் நிரூபிக்கிறீர்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் எனக்கு நீங்கள் பிரச்சனையை தான் ஏற்படுத்துகிறீர்கள். அடுத்த மாதம் அமெரிக்கா வரும் உங்களுக்கு டின்னர் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு நாடு முழுவதிலும் இருந்து அனைவரும் பங்கேற்க விரும்புகின்றனர்.
நிகழ்ச்சிக்கான டிக்கெட் முழுவதுமாக தீர்ந்துவிட்டது. இதை நான் கிண்டல் செய்வதாக நீங்கள் நினைக்கலாம். ஆனால் என் குழுவினரிடம் நீங்களே கேட்டு பாருங்கள் அது உண்மை என்று உங்களுக்கு புரியும். மேலும் நான் கேள்விபடாத நபர்களிடம் இருந்து கூட டிக்கெட் கேட்டு எனக்கு தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சினிமா பிரபலங்கள், உறவினர்கள் என்னை நச்சரிக்கின்றனர். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் புகழ் பெற்றவாக இருக்கிறீர்கள் '' என ஜோக் வடிவில் ஜோபைடன் கூறினார்.
இதை கேட்ட பிரதமர் மோடி உள்பட அங்கு கூடியிருந்த அனைவரும் சிரித்தனர். பிரதமர் மோடி அடுத்த மாதம்(ஜூன்) 22ம் தேதி அமெரிக்காவுக்கு அரசு முறை பயணமாக செல்ல உள்ளார். இந்த நிகழ்ச்சியை குறிப்பிட்டு தான் அமெரிக்க அதிபர் ஜோபைடன் இப்படி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் ஆஸ்திரேலியா பிரதமர் அந்தோனி அல்பன்சும் பிரதமர் மோடி பற்றி சில விஷயங்களை பகிர்ந்து கொண்டார். இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை சிட்னி வருகிறார். இந்த வளையில் அவரை சந்திக்கவும், அவரது உரையை கேட்கவும் ஏராளமானவர்கள் டிக்கெட் கேட்கின்றனர். 20 ஆயிரம் பேர் வரை இருக்கும் அரங்கத்துக்கான டிக்கெட் விற்பனையான நிலையில் இன்னும் பல பிரபலங்கள் டிக்கெட் கேட்டு வருகின்றனர்'' என்றார்.
-
வளைகுடா போர் நிறுத்தத்தால் மிடில் கிளாஸ் மக்களுக்கு என்ன லாபம்? சத்தமில்லாமல் மாற போகும் 5 மேட்டர் -
60 எச்சரிக்கை.. 8 முறை விமானம் மூலம் வார்னிங்.. அமெரிக்கா தாக்குதலில் இந்தியர்கள் பலியானது எப்படி? -
இந்தியர்கள் உட்பட வெளிநாட்டினருக்கு மட்டும் தடை.. AI வைத்து அமெரிக்கா ஆடும் கேம்? பின்னணி -
இந்தியாவுக்கு சிக்கல் தொடரும்.. ஹார்முஸ் திறக்கப்பட்டாலும் கூட எல்லா பிரச்சனையும் உடனே தீராது! -
போர் முடிந்தது.. சுவிட்ச் போட்டது போல் பெட்ரோல் விலை நாளைக்கே குறையுமா..? வாய்ப்பில்ல ராஜா, ஏன்? -
அடுத்த 60 நாட்கள் ரொம்ப முக்கியம்.. அமெரிக்கா ஈரான் போரில் மாற்றம்! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
100 நாட்களை தாண்டிய அமெரிக்கா இஸ்ரேல் தாக்குதல்.. ஈரானை இன்னும் வீழ்த்த முடியாத ரகசியம் என்ன? -
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications