Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பி.வி.நரசிம்மராவுக்கு "கசின் சிஸ்டர்" இருந்தால் எப்படி இருப்பார்?.. இப்படித்தான் இருப்பார்!

Subscribe to Oneindia Tamil

லண்டன்: சிரித்து சிரித்து என்னை சிறையில் இட்டாய் என்று பாட்டுப் பாடலாம்.. சிரிப்பு உடல் ஆரோக்கியத்திற்கு நல்ல மருந்து என்று கூட சொல்கிறார்கள். ஆனால் ஒரு பெண் சிரித்தே 40 வருடமாகி விட்டது. இதற்கான காரணம்தான் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

கடந்த 40 வருடமாக கொஞ்சம் கூட சிரிக்காமல், ஏன் மெல்லிய புன்னகை கூட பூக்காமல் இந்த பெண் இருந்து வருகிறார் என்றால் மலைப்பாகத்தான் இருக்கிறது.

இப்படி சிரிக்காமல் வம்படியாக வாயை டோர் லாக் செய்து வைத்திருக்கும் இப்பெண் அதற்குச் சொல்லும் காரணம்தான் நம்மை வியக்க வைக்கிறது. அதாவது முகத்தில் சுருக்கம் வராமல் தடுப்பதற்காகவே இவர் சிரிப்பதை நிறுத்தி விட்டாராம்.

டெஸ் கிறிஸ்டியன்

டெஸ் கிறிஸ்டியன்

இந்தப் பெண்ணின் பெயர் டெஸ் கிறிஸ்டியன். இப்போது இவருக்கு 50 வயதாகிறது. தனது 10 வயதில் இவர் கடைசியாக சிரித்துள்ளார். அதன் பிறகு "சிப்பே" கிடையாது.

கூடி நின்னு கும்மியடிச்சாலும் கம்மென்று

கூடி நின்னு கும்மியடிச்சாலும் கம்மென்று

தன்னைச் சுற்றி சிரிப்பு சுனாமியே வீசினாலும் கூட, எத்தனை பேர் சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சித்தாலும் இவரிடம் உங்களது பாச்சா பலிக்காது. சிரிக்கவே மாட்டார். கம்மென்று அமர்ந்திருப்பார்.

அப்படியே கல்லு மாதிரி

அப்படியே கல்லு மாதிரி

சுற்றியுள்ளவர்கள் சிரித்துக் கும்மாளமிட்டுக் கொண்டிருந்தாலும் டெஸ் மட்டும் அப்படியே கல் போல அமர்ந்திருப்பார். அவரது உடல் மொழியை வைத்துத்தான் அவரும் உற்சாகமாக அந்த சூழலை என்ஜாய் செய்து கொண்டிருக்கிறார் என்பதை அறியலாம். ஆனால் முகம் அப்படியே சுவர் மாதிரி அமைதியாக இருக்கும்.

விரியாத உதடுகள்

விரியாத உதடுகள்

இவரது உதடுகள் எத்தகைய காமெடிக்கும் விரியாது, திறவாது. மெல்லிய புன்னகை கூட கிடையாது. 40 வருடமாக இதை பின்பற்றுகிறார் டெஸ். இவரது மகள் பிறந்தபோது கூட இவர் சிரிக்கவில்லையாம். மகிழ்ச்சியை உதடுகள் மூலமாக வெளிக்காட்டவில்லையாம்.

அப்படி என்ன தாயி உனக்கு வைராக்கியம்

அப்படி என்ன தாயி உனக்கு வைராக்கியம்

அப்படி என்னதான் இவரிடம் வைராக்கியமாக உள்ளது.. ஏன் இவர் சிரிக்க மாட்டேன் என்கிறார் என்று அறிய வேண்டுமானால் நாம் ஒரு பிளாஷ்பேக்குக்குப் போக வேண்டும்.. "வளையம்" ஓட ஆரம்பிச்சிருச்சு .. வாங்க "பேக்" போகலாம்!

அப்போது எனக்கு 10 வயசு

அப்போது எனக்கு 10 வயசு

"அப்போது எனக்கு 10 வயது இருக்கும். எனக்கு என் முக அழகு மீது மிகுந்த நம்பிக்கை உண்டு. அதைப் பேணிக் காக்க விரும்பினேன். அப்போதுதான் முகத்தில் சிரிக்கும்போது தசை நெகிழ்ச்சி அடையும், அதனால் முகத்தில் சுருக்கம் வரும் எனத் தெரிய வந்தது. இதையடுத்து சிரிப்பதில்லை என்ற முடிவெடுத்தேன். இப்போது வரை கடைப்பிடிக்கிறேன்.

என்னால் முடியும்

என்னால் முடியும்

அன்று முதல் சிரிக்காமல் இருக்க முயற்சி செய்து அதைப் பழக்கப்படுத்திக் கொண்டேன். யார் என்ன ஜோக் அடித்தாலும் என்னால் சிரிக்காமல் இருக்க முடியும். அந்த அளவுக்கு கட்டுப்பாட்டைப் பழகியுள்ளேன்.

போட்டாக்ஸ் பயன்படுத்தவில்லை

போட்டாக்ஸ் பயன்படுத்தவில்லை

நான் போட்டாக்ஸ் பயன்படுத்தி இப்படி சிரிப்பைத் துறந்திருக்கலாம் என பலர் கருதுகிறார்கள். அது கிடையாது. நான் சிரிக்காமல் இருக்க இயற்கையாகவே பழகிக் கொண்டேன். எனது பழக்கத்திற்கு நல்ல பலனும் கிடைத்துள்ளது. இப்போது வரை எனது முகத்தில் ஒரு சின்னச் சுருக்கம் கூட கிடையாது.

இளமை எனும் பூங்காற்று

இளமை எனும் பூங்காற்று

நான் இளமையாக, இருக்க விரும்புகிறேன். அதற்காகவே இத்தனை காலமாக இதைக் கடைப்பிடித்து வருகிறேன். எனது முகம் 50 வயதுப் பெண்ணுக்கிய முகமாக இல்லாமல் இருக்க எனது இந்த பழக்கமே காரணம்.

பேஷியலே தேவையில்லை

பேஷியலே தேவையில்லை

எனது முகத்திற்கு இதுவரை பேஷியல் செய்ததில்லை. எந்த கிரீமையும் பயன்படுத்தியதில்லை. எனது இயற்கையான சிரிக்காமல் இருக்கும் இந்தப் பழக்கமே எனது முக வசீகரத்திற்கு முக்கியக் காரணம் என்று சொல்கிறார் டெஸ்.

சாத்தியம்தான்

சாத்தியம்தான்

இது எந்த அளவுக்கு சாத்தியம் என்று சரும நோய் நிபுணர் டாக்டர் நிக் லோவிடம் கேட்டால், சாத்தியம்தான். சிரிக்காமல் இருந்தால் நிச்சயம் முகத்தில் சுருக்கம் வராதுதான் என்று உறுதிப்படுத்துகிறார்.

விரியாத உதடுகள்

விரியாத உதடுகள்

இவரது உதடுகள் ஒரு அளவுக்கு மேல் விரியாது. அதை கரெக்டாக பாலோ செய்கிறார் டெஸ். முதலில் இதற்கு கடுமையான முயற்சி எடுத்துள்ளார். பின்னர் பழக்கப்பட்டதும் எளிதாகி விட்டதாம். சாப்பிடும்போதும், பேசும்போதும் கூட உதடு விரிவை கன்ட்ரோலாக வைத்துக் கொள்கிறாராம் டெஸ்.

நம்மால முடியாது சாமியோவ்!

நம்மால முடியாது சாமியோவ்!

வாய் கிழியப் பேசுவோருக்கும், வாய் வலிக்க சிரிப்போருக்கும் டெஸ் ஒரு இமாலய ஆச்சரியம்தான்.. ஆனால் நாகேஷ், கவுண்டமணி, வடிவேலு போன்றோர் பிறந்த பூமியில் அவதரித்த நம்மால் சிரிக்காமல் எப்படி இருக்க முடியும் என்றுதான் தெரியவில்லை!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+