பூமா சிங்கமும்.. ஜாக்கிங் போன இளைஞரும்.. கடும் சண்டை.. கடைசியில் டிவிஸ்ட்டை பாருங்க!
கொலராடோவில் சிங்கத்துடன் நேருக்கு நேர் மோதினார் இளைஞர் ஒருவர்.
கொலராடோ: நேருக்கு நேர்.. ஒத்தைக்கு ஒத்தை.. மோதி சண்டை போட்டு ஜெயித்துவிட்டார் ஒரு இளைஞர்... எதிரி யார் தெரியுமா? சாட்சாத் சிங்கம்தான்! பரபரக்க வைக்கும் சீன்கள், ட்விஸ்ட்கள், கிளைமாக்ஸ் நிறைந்த செய்திதான் இது!!
மேற்கு அமெரிக்காவின் கொலோரடோ பகுதி மலையடிவாரத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கும். இந்த சிங்கத்திற்கு பூமா என்று பெயர்.
இந்நிலையில் அந்த மலையடிவாரம் பக்கம் ஒரு இளைஞர் ஜாக்கிங் போய் கொண்டிருந்தார். அவரை ஒரு சிங்கம் பார்த்துவிட்டது.

சண்டைக்கு ரெடி
அதனால் பாய்ந்து தாக்கலாம் என்று நினைத்து பதுங்கியது. இளைஞர் கிட்ட வந்ததும் ஒரே பாய்ச்சலில் பாய்ந்தது. திடீரென்று பின்பக்கமாக சிங்கம் வந்து தாக்குவதை கண்டு இளைஞர் திடுக்கிட்டு, அச்சமுற்று, அலறி, கூச்சலிட்டு, பயந்து, ஓடிவிடுவார் என்று பார்த்தால், திரும்பி சிங்கத்தை பார்த்துவிட்டு சண்டைக்கு ரெடி ஆகிவிட்டார்.

மணிக்கட்டை கவ்வியது
குரலை உசத்தி கத்தி, கைகளை உயர்த்தியவாறே சிங்கத்தை தாக்க தொடங்கினார். சிங்கத்தின் பலமே பற்கள்தானே? எங்கே கடித்தால் உயிருக்கு ஆபத்து என்றுகூட சிங்கத்துக்கு தெரிந்திருக்கிறது. அதனால் பற்களை வைத்து இளைஞரின் மணிக்கட்டை கவ்வியது. இதனால் இளைஞரின் முகம், கைகளில் பலமான ரத்தம் கொட்டியது.

தலையை விடவில்லை
ஆனாலும் இளைஞர் விடவில்லையே.. சிங்கத்தின் தலையை கெட்டியாக பிடித்து கொண்டு பக்கத்தில் இருந்த பாறை மீது இழுத்து வைத்து மோதினார். பாறை மீது சிங்கத்தின் தலை மடார் என இடித்தது. ஆனாலும் தலையை பிடித்து கொண்டு, திரும்ப திரும்ப பாறை மீது மோதியவாறே இருந்தார் இளைஞர்.

சிங்கம்
இளைஞர் சிங்கத்தின் தலையை பிடிக்க, சிங்கமோ இளைஞரின் மணிக்கட்டை பிடிக்க ரெண்டு பக்கமும் விடாப்பிடிதான். கடைசியில் பலமுறை பாறையில் முட்ட வைத்ததில் சிங்கம் செத்தே போய்விட்டது.

உடம்பெல்லாம் காயம்
உயிர் போகும்போதுதான் இளைஞரின் மணிக்கட்டை வாயிலிருந்து விடுவித்தது. காட்டு ஹீரோவை ஜீரோவாக்கிய இளைஞனுக்கு உடம்பெல்லாம் காயம். இப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications