யு.எஸ்.: சீக்கிய சிறுவனை தீவிரவாதி என்று திட்டிய பள்ளிக் குழந்தைகள்: தீயா பரவும் வீடியோ
நியூயார்க்: அமெரிக்காவில் பள்ளி பேருந்தில் சீக்கிய சிறுவனை சில குழந்தைகள் தீவிரவாதி என்று கூறி அவமதித்துள்ள வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி உள்ளது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள துலுதில் இருக்கும் சாட்டஹூச்சி துவக்கப் பள்ளியில் படித்து வருபவர் ஹர்சுக் சிங். அவர் பள்ளிப் பேருந்தில் அமர்ந்திருக்கையில் சில குழந்தைகள் அவரை தீவிரவாதி என்று கூறி கிண்டல் செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.
வீடியோவில் காண்பிக்கப்பட்டுள்ளதாவது,

தீவிரவாதி
சிங் பின்னால் அமர்திருந்த சிறுமி அவரை பார்த்து தீவிரவாதி, தீவிரவாதி என்கிறார். அந்த சிறுமி சிறுவனை நோக்கி விரலை நீட்டுகிறார். இருப்பினும் சிறுவனோ இதை எல்லாம் யார் கண்டு கொள்கிறார்கள் என்று தெரிவிக்கிறார்.
வீடியோ
ஹர்சுக் சிங் அப்லோட் செய்த இந்த வீடியோவை இதுவரை 1 லட்சத்து 30 ஆயிரம் பேர் பார்த்துள்ளனர். பள்ளிக் குழந்தைகள் என்னை ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் என்கின்றனர் என்று சிங் வீடியோவில் தெரிவித்துள்ளார்.

சீக்கியர்
என் போன்றோரிடம் இது போன்று நடந்து கொள்ளாதீர்கள். நான் முஸ்லீம் அல்ல சீக்கியர், தெரிந்து கொள்ளுங்கள் என்று சிறுவன் தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தன்னை கிண்டல் செய்வதை தான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று அந்த சிறுவன் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சி
துவக்கப் பள்ளி மாணவனை சக மாணவ, மாணவியர் இனத்தின் அடிப்படையில் கிண்டல் செய்துள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ஒசாமா
கடந்த ஆண்டு அமெரிக்காவின் லாங் ஐலேண்டில் 29 வயது சீக்கியரான சந்தீப் சிங் என்பவரை சிலர் ஒசாமா என்று அழைத்து, உன் நாட்டுக்கு திரும்பிச் செல் என்று கூறி தாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications