இன்ஸ்டா ரீலுக்கு தடை .. நெருக்கடி கொடுத்த யூட்யூப்.. பர்க்கர் விலை இத்தனை ஆயிரமா? பாவம் ரஷ்ய மக்கள்
மாஸ்கோ : உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யா படைகளின் போர் குறித்த தவறான செய்திகளை பரப்புவதால் இன்ஸ்டா ரீலுக்கு ரஷ்யா தடை விதித்துள்ள நிலையில் ரஷ்யாவின் செய்தி சேனல்களை ஒளிபரப்ப முடியாது என யூடியூப் நிறுவனம் அதிரடி தடை விதித்துள்ளது.
நேட்டோ அமைப்பில் தங்களை சேர்க்கக்கோரி கோரிக்கை வைத்ததிலிருந்து உக்ரைன் நாட்டிற்கு தலைவலி ரஷ்யாவின் ரூபத்தில் உருவானது.
உக்ரைன் ரஷ்யாவின் மகுடம் என பல ஆண்டுகளுக்கு முன்பே அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் புடின் கூறியிருந்த நிலையில் இதனை வாய்ப்பாக பயன்படுத்தி எல்லைகளை படைகளை குவிக்கத் தொடங்கினார்.

ரஷ்யா தாக்குதல்
பல உலக நாடுகளின் எச்சரிக்கையின் மீறி கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்தது ரஷ்யா. ஏவுகணைகள் பீரங்கிகள் மூலம் அடுத்தடுத்து ரஷ்யா நடத்திய தாக்குதலில் திக்குமுக்காடி போனாலும் சுதாரித்து எழுந்த உக்ரைன் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மிகப் பெரும் வல்லரசான ரஷ்யா உக்ரைனின் எதிர் தாக்குதலுக்கு தற்போது வரை விலை கொடுத்து வருகிறது. ஆயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் ரஷ்யாவின் விமானங்களும் பீரங்கிகளும் உக்ரைன் வீரர்களால் தகர்க்கப்பட்டன.

உக்ரைன் போராட்டம்
மேலும் உக்ரைன் ராணுவத்திற்கு ஆதரவாக அந்நாட்டு மக்களும் துப்பாக்கி ஏந்தி போராடி வருவதை ரஷ்யாவை எதிர்பார்க்க வில்லை என்றே கூறலாம். அந்தளவுக்கு உக்ரைன் மிகவும் ஆக்ரோஷமாக போராடி வருகிறது. போர் தொடங்கி பல நாட்கள் ஆகிவிட்ட நிலையில் எப்படியாவது போரை நிறுத்த வேண்டும் என உலக நாடுகள் கவலை கொண்டுள்ளன அதே நேரத்தில் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் தொடர்ந்து வருகிறது ஆயுதங்களை கீழே போட போவதில்லை என உக்ரைனும் ஆயுதங்களை கைவிட்டால் தான் போர் நிறுத்தம் என ரஷ்யாவும் கூறிவருகின்றது.

சேவைக்கு தடை
அதே நேரத்தில் உக்ரைன் நாட்டிற்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பேசி வருகின்றன அந்நாட்டிற்கு ஆயுதம், நிதி என உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. உலகின் பல நிறுவனங்களும் ரஷ்யாவில் தங்கள் சேவைக்கு தற்காலிக தடை விதித்து வருகின்றன. ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதார தடை, எண்ணெய் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆப்பிள், நெட்ப்ளிக்ஸ், மெக்டொனால்ட் ,கோகோகோலா, பெப்சி, சோனி மியூசிக் உள்ளிட்ட நிறுவனங்கள் ரஷ்யாவில் தங்கள் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன. தற்போது மெக்டொனால்டு கடைகள் மூடப்பட்டுள்ள நிலையில் கள்ளச் சந்தையில் ஒரு பர்கர் 25 டாலர் வரை கள்ளச்சந்தையில் விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இன்ஸ்டா ரீலுக்கு தடை
அதே நேரத்தில் இன்ஸ்டாகிராமின் ரீல் சேவையில் ரஷ்ய படைகள் போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும் ரஷ்யாவின் தாக்குதல் குறித்து தவறான தகவல்கள் வெளியிடப்படுவதாக கூறி இன்ஸ்டாரீல் சேவைக்கு ரஷ்யா அதிரடி தடை விதித்துள்ளது. அதே நேரத்தில் ரஷ்யாவின் செய்தி நிறுவனங்கள் மற்றும் செய்தி சேனல்கள் உலகம் முழுவதும் ஒளிபரப்பப்பட்டு வந்த நிலையில் அதற்கு தடை விதிப்பதாக யூடியூப் நிறுவனம் அறிவித்துள்ளது. ஏற்கனவே பல்வேறு நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் ரஷ்யாவுக்கு இந்த நடவடிக்கை மேலும் தலைவலியை உருவாக்கியுள்ளது.
-
குவைத் நாட்டில் ஈரானின் வெறியாட்டம்! விமான சேவை மொத்தமாக முடக்கம்.. ஜோர்டானில் மட்டும் 12 ஏவுகணைகள் -
ஈரானுக்கு இனி கெட்ட காலம்.. பீட் ஹெக்செத் பேச்சால் பரபரப்பு..! Hormuz இனி எங்க கண்ட்ரோல்! -
நாட்டில் 21 இடங்களுக்கு குறி.. பதம் பார்த்த ஈரான் IRGC ராணுவ படை.. அலறிய அமெரிக்கா! -
இந்தியா மிஸ் செய்த பொக்கிஷம்.. இப்போ அமெரிக்காவே அலறுதே! கேம் சேஞ்சர் மிக்-35 -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது?












Click it and Unblock the Notifications