10,000 லிட்டர் கோகோ கோலா.. மொத்தமா குவிச்சு வச்சு.. வெடிக்க விட்டு.. ரஷ்யர் செய்த வெட்டி வேலை!
மாஸ்கோ: ரஷ்யாவில் 10 ஆயிரம் லிட்டர் கோகோ கோலாவை மொத்தமாக குவிக்க வச்சு யூடியூபர் ஒருவர் வெடிக்க செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன.
கோகோ கோலாவுடன் பேக்கிங் சோடா அல்லது மென்டோஸ் கொண்டு வெடிக்க செய்யும் அறிவியல் செயல்முறை விளக்கம் கடந்த பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் ஒரு ரஷ்ய யூ டியூப் சேனல் வைத்திருக்கும் ஒருவர் கோகோ கோலாவை வைத்து பெரிய எரிமலை போன்று ஒரு நிகழ்வையே நடத்தி விட்டார்.
சுமார் 10 ஆயிரம் கோகோ கோலாவை பேக்கிங் சோடாவுடன் வைத்து வெடிக்க செய்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. மேக்ஸிம் மோனாகோவ் என்ற யூடியூபர் ஒருவர் கடந்த 4 ஆண்டுகளாக இந்த நிகழ்வுக்காக கோகோ கோலாவை சேகரித்து வைத்திருந்தார்.

மோனகோவ்
இதன் மூலம் அவர் 10 ஆயிரம் லிட்டர் கோகோ கோலாவை வைத்திருந்தார். ஒரு காலி நிலத்தின் நடுவில் ஒரு பெரிய கெய்சரை மோனகோவ் உருவாக்கினார். மோனகோவின் குழுவினர் அந்த கெய்சரில் கோகோ கோலாக்களை அடுக்கி வைத்தனர்.

பிரஷர்
பின்னர் ஒரு டப் முழுவதும் பேக்கிங் சோடாவை அந்த கெய்சரில் போட்டனர். பின்னர் அந்த கெய்சர் மேல் இருந்து கொண்டு ஒரு கயிறை இழுத்துவிட்டு மோனகோவும் அவரது குழுவை சேர்ந்த ஒருவரும் கீழே குதித்தனர். பின்னர் அந்த கெய்சரின் மேற்புர துளையிலிருந்து கேஸ் ரிலீசாகி அந்த பிரஷரில் கோகோ கோலா வெடித்தது.

ஆகஸ்ட் 21
பார்ப்பதற்கு எரிமலை போல் இருந்தது. இதை செய்ய அவருக்கு சுமார் இந்திய மதிப்பில் 6.9 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளார். சுமார் 20 நிமிடங்கள் ஓடக் கூடிய இந்த வீடியோவை இதுவரை 70 லட்சத்திற்கும் மேலானோர் பார்த்துள்ளனர். 1.2 லட்சம் பேர் கமென்டுகளை கொடுத்துள்ளார்கள். இந்த வீடியோ ஆகஸ்ட் 21 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்டது.

கார்பன் டை ஆக்ஸைடு
இதுகுறித்து கலிபோர்னியா பல்கலைக்கழகம் கூறுகையில் ஆசிட் தன்மை கொண்ட குளிர்பானத்தை பேக்கிங் சோடாவில் உள்ள கார்பனேட்டுடன் இணைக்கும் போது ஹைட்ரஜன் கார்பனேட் உருவாகிறது. இந்த ஹைட்ரஜன் கார்பனேட் உடைந்து கார்பன் டை ஆக்ஸைடு, நீராக மாறி கேஸ் போல் கொப்பளிக்கிறது என்று அந்த பல்கலைக்கழகம் தெரிவித்தது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications