“போர் நிறுத்தம்! ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை” - ஜெலன்ஸ்கி
கீவ்: ஈஸ்டர் திருநாளை ஒட்டி 30 மணி நேரத்திற்கு போர் நிறுத்தப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்நிலையில், ரஷ்யாவின் வார்த்தையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிலளித்துள்ளார்.
போர் நிறுத்தம் என்று ரஷ்யா சொல்கிறது. ஆனால் இன்னமும் சில பகுதிகளில் ஏவுகணை தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை போர் நிறுத்தத்தில் நாங்கள் ஈடுபடுவோம் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு உண்மையல்ல என்று ஜெலன்ஸ்கி மறுப்பு தெரிவித்திருக்கிறார். ரஷ்ய எல்லை பகுதிகளில் உள்ள குர்ஸ்க் மற்றும் பெல்கிரேட் பகுதியில் இன்னும் அர்டில்லரி (சிறிய ரக பீரங்கி) தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது என்று ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
எங்கள் கமாண்டர்-இன்-சீஃப்பின் அறிக்கைப்படி இன்னும் பல இடங்களில் தாக்குதல்கள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. மாஸ்கோவிலிருந்து வரும் வார்த்தைகளில் நாங்கள் எப்போதும் நம்பிக்கை வைக்க மாட்டோம். அவர்களின் மோசடித்தனம் பற்றி எங்களுக்கு தெரியும் நாங்கள் அதற்கு பதிலளிக்க ரெடியாக இருக்கிறோம். ரஷ்யாவின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் நாங்கள் உறுதியாக பதிலடி கொடுப்போம்.
உண்மையில் ரஷ்யா அமைதியை விரும்பினால், அதற்கு நாங்களும் ஒத்துழைப்பு கொடுப்போம். ஆனால் ரஷ்யாவின் வார்த்தையில் உண்மையில்லை. ரஷ்ய டிரோன்கள் இன்னும் ஆக்டிவாகத்தான் இருக்கிறது" என்று ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.
இந்த போருக்கு காரணம் நேட்டோ படைதான். அமெரிக்கா தலைமையிலான நேட்டோவில் இணைய வேண்டும் என்று உக்ரைன் தொடர்ந்து முயன்று வந்தது. எந்த நாடு நேட்டோவில் இணைகிறதோடு, அந்நாட்டின் எல்லையில் அமெரிக்க மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நேட்டோ நாடுகளின் படைகள் நிலை நிறுத்தப்படும். அப்படியெனில் உக்ரைனிலும் நேட்டோ படை நிலை நிறுத்தப்படும். இது ரஷ்யாவுக்கு நேரடி அச்சுறுத்தல். ரஷ்யாவும், அமெரிக்காவும் பாம்பும் கீரியுமாக இருக்கின்றன.
அப்படி இருக்கும்போது நேட்டோ படைகள் ரஷ்ய எல்லையில் குவிக்கப்பட்டால் அது சிக்கலைதான் ஏற்படுத்தும். எனவே நேட்டோவில் உக்ரைன் இணைய கூடாது என்று ரஷ்யா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. ஜெலன்ஸ்கி இதனை கேட்கவில்லை. நேட்டோவில் இணைவதற்கான சில முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டார். இதனையடுத்து போர் தொடங்கியது. இந்த போரை சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று புதின் கூறியிருந்தார். வெறும் 3 மாதங்கள் மட்டுமே இது நீடிக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால் 3 ஆண்டுகளை கடந்தும் போர் நீடித்து வருகிறது. இந்த போரை பயன்படுத்தி உக்ரைனில் உள்ள அரிய வகை கனிமங்களை அமெரிக்கா எடுக்க திட்டமிட்டிருக்கிறதுட என்பது தனிக்கதை.
-
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு












Click it and Unblock the Notifications